Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
மருத்துவக் கல்வி மூலமே எங்கள் மருத்துவ சமுதாயம் வளர்ச்சியடைய முடியும்- வைத்திய நிபுணர் கே.அருள்மொழி

 

மருத்துவக் கல்வி மூலமே எங்கள் மருத்துவ சமுதாயம் வளர்ச்சியடைய முடியும்.  இந்த வளர்ச்சிக்கு வழிகாட்டியான இந்தப் பெறுமதி மிக்க மருத்துவ சங்கத்துக்குத் தலைமையேற்பதில் பெருமை கொள்கிறேன்

ம.ட்டக்களப்பு மருத்துவ சங்கத்தின் புதிய தலைவர் பதவியேற்பு நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பு ஈஸ்ற் லகூன் ஹோட்டலில் நடைபெற்றபோதே .மட்டக்களப்பு மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் கே.அருள்மொழி தெரிவித்தார்.

நோய்களைத் தவிர்த்தல் பற்றி மக்கள் மற்றும் நோயாளிகளை அறிவூட்டுவதே வைத்தியத்துறையினருக்கு முக்கியமானது. அந்தவகையில் எங்களது இறுதி இலக்கு, நல்ல ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதேயாகும். அத்துடன், சமுதாய சேவைகளில் ஈடுபடுவது, நமது சமூகத்தை மேம்படுத்தும் என்று மட்டக்களப்பு மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் கே.அருள்மொழி தெரிவித்தார்.

முன்னாள் தலைவர் வைத்திய நிபுணர் கே.சிவகாந்தன், 2018ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராகத் தெரிவான வைத்திய நிபுணர் கே.அருள்மொழிக்கு பாரம்பரிய பதக்கம் அணிவித்துக் கடமைகளைக் கையளித்தார்.

2018இல் வெற்றிகரமான செயற்பாடுகளுக்காக நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம். மருத்துவப் பணியென்பது ஒரு கூட்டுப்பண்புடையது, அனைத்து நோயாளிகளுக்கும் சிறப்பான மற்றும் உகந்த சுகாதார வசதிகளை வழங்குவதற்கான எமது குறிக்கோளை நாம் அடைந்து கொள்ளலாம்.

'ஒரு மனிதனுக்கு ஒரு மீன் கொடுத்தால், அவர் ஒரு நாள் சாப்பிடுவார். ஆனால், அவருக்கு மீன்பிடிக்கக் கற்றுக் கொடுத்தால், அவர் வாழ்நாள் முழுவதும் சாப்பிடுவார்'. அதேபோன்று, நோய்களைத் தவிர்த்தல் பற்றி மக்கள் மற்றும் நோயாளிகளை அறிவூட்டுங்கள்.  எங்களது இறுதி இலக்கு நல்ல ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதேயாகும். அத்தோடு சில சமுதாய சேவைகளில் ஈடுபடுவது நமது சமூகத்தை மேம்படுத்தும்.

நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும். எங்கு தொடங்க வேண்டும் என்பது தெளிவானது, குறைந்தபட்சமான வளங்களைக் கொண்டிருக்கும், நாம் உயர்ந்த சுகாதார பராமரிப்பு முறையை உருவாக்குவதற்காக உழைக்க வேண்டும்.

இந்த மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். எங்கள் சமூகத்துடனான கடப்பாட்டை நாங்கள் மதிப்போம். நம்முடைய செயற்பாடுகளில் முக்கியம் பெற்றவர்கள் நோயாளர்களே எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் டொக்டர் வி.விவேகானந்தராசா, மட்டக்களப்பு மருத்துவ சங்கத்தின் இவ்வருடத்துக்கான தலைவர் வைத்திய நிபுணர் கே.அருள்மொழியால் கௌரவிக்கப்பட்டார்.

கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் வைத்திய நிபுணர் வி.விவேகானந்தராசா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன், 2019ஆம் ஆண்டுக்கான தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள வைத்திய நிபுணர் எஸ்.சரவணன், செயலாளர் வைத்திய அதிகாரி மரியானோ ரூபராஜன், சௌக்கிய பராமரிப்பு பீட பீடாதிபதி வைத்திய நிபுணர் அஞ்சலா அருள்பிரகாசம், மற்றும் சிரேஸ்ட விரிவுரையாளர்கள், மட்டக்களப்பு மருத்துவ சங்கத்தின் உறுப்பினர்களான வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

video of article
Empty
photos
Facebook Comments
0 votes
recently stories
இமையாணன் மேற்கு தூப்புலத்தில் 3 வீடுகளில் ஒரே நேரத்தில் கொள்ளை
சுதாகரனுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் பாராளுமன்றஉறுப்பினர்
பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கான பொறுப்பு பிரதேச சபையிடமே-மாவை
எனது தந்தையை விடுதலை செய்யுங்கள்- அரசியல் கைதியின் மகன் ஜனாதிபதிக்கு கடிதம்!
குருக்கள் கொலை: இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்குத் தூக்கு- தீர்ப்பு வியாழன் அன்று!
யாழ்ப்பாணம் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா
டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு
What are you looking for ?
Do you have a News to share ?