Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
மனித உயிருக்கு கேடுவிளைவிக்கும் பெயர் தெரியாத டிசீஸ் எக்ஸ் நோய்

உலக அளவில் மனித இனத்தை அச்சுறுத்துக்கூடிய உயிர்கொல்லி நோயாக டிசீஸ் எக்ஸ் என்ற பெயர் தெரியாத புதிர் நோய் பரவலாம் என்று உலக சுகாதார அமைப்பு(WHO) கடுமையாக எச்சரித்துள்ளது.

இதுவரை அந்த நோயின் தீவிரத்தையும், எதிர்ப்பு மருந்துகளையும் கண்டுபிடிக்காத நிலையில், இதற்கு டிசீஸ் எக்ஸ் என்று நார்வே நாட்டின் அறிவியல் அறிஞர்கள் பெயரிட்டுள்ளனர். எதிர்காலத்தில் மனித இனத்தை அச்சுறுத்தும் நோயாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார அமைப்பு மனித சமூகத்தை அச்சுறுத்தும் நோய்களை பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அச்சுறுத்தும் நோய்களை பட்டியலிட்டது.

அதில் எபோலா, லாசா பீஃவர், சிசிஎச்எப் ஹீமோராஜிக் ஃபீவர், நிபா, மெஸ்(MESS), சார்ஸ்(SARS), எபோலா, டிசீஸ் எக்ஸ் என்ற புதிய நோயையும் அறிவித்துள்ளனர்.

இந்த டிசீஸ் எக்ஸ் நோய் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், ‘ இந்த டிசீஸ் எக்ஸ்’ நோய் சர்வதேச அளவில் மிகப்பெரிய கொள்ளை நோயாக உருவெடுக்கும். ஆனால், மனித இனத்துக்கு எந்தவிதமான பாதிப்பை உண்டு செய்யும் என்பது தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளது.

video of article
Empty
photos
Facebook Comments
0 votes
recently stories
நெடுந்தீவு பிரதேச சபையின் முதலாவது அபிவிருத்திக் கூட்டம்!
ஆண்டொன்றுக்கு பல ஆயிரம் உயிர்கள் அழிக்கப்படுகின்றன!
”சூழல் புனிதமானது” ஐந்தாவது தடவையாக நல்லதண்ணி பிரதேசத்தில்!
முல்லையில் இடம்பெறும் பெரும்பான்மையின குடியேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!
கோட்டாவை கைது செய்-அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம்
இந்தியாவிலிருந்து வந்தவர்களுக்கான மீள்குடியேற்றப்பதிவுகள் ஆரம்பம்!
நகர அபிவிருத்தி சபையின் உத்தரவாதத்துக்காக காத்திருக்கின்றோம்!மாநகர சபை மேயர்.!
ஹாரி பாட்டரின் கதாநாயகன் வெர்னே ட்ராயர் காலமானார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு கட்டுப்பாடு வேண்டாம்.
இலங்கையில் விரைவில் புதிய முச்சக்கரவண்டி அறிமுகம்!
இறப்பர் தொழிற்சாலை சிரேஷ்ட ஆய்வக மேற்பார்வையாளர் கைது!
சமூக வலைத்தளங்கள் ஊடாக பண மோசடி- மக்களே அவதானம்- சுங்கப் பிரிவு எச்சரிக்கை!
What are you looking for ?
Do you have a News to share ?