Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
பாராளுமன்ற தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடத்த வேண்டும்- மஹிந்த

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தலைசாய்த்து, உடனடியாக பாராளுமன்றத் தேர்தலை  அரசாங்கம் நடத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு, இராணுவத்தினருக்கு எதிராக பழிவாங்கல், அரசியற் பழிவாங்கல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிரான மக்களின் சர்வஜன வாக்கெடுப்பாக தேர்தல் முடிவுகளை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்த அவர், 

நடந்துமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 340 சபைகளில், 223 சபைகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழிநடத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கைப்பற்றி  இலங்கை அரசியல் வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையாக இருந்த பகுதிகளில் மட்டுமல்லாமல், யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒருசில பகுதிகளிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆசனங்களை வென்றுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பதவிகளுக்கு நடக்கப்போவது என்ன என்ற கேள்வி தென்னிலங்கை அரசியற் களத்தில் பேசுபொருளாக மாறியிருக்கின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பில் இன்று திங்கட்கிழமை விசேட ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெருவெற்றியடைந்ததை தொடர்ந்து அக்கட்சி நடத்துகின்ற பிரதான  ஊடகவியலாளர் சந்திப்பு இது என்பதோடு, ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

video of article
Empty
photos
Facebook Comments
0 votes
recently stories
உதைபந்தாட்ட போட்டியில் கைகலப்பில் விளையாட்டு கழகங்கள்.
முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுமுறிப்புக் குளத்தில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுப்பு
லசந்த கொலை தொடர்பில் இரகசிய வாக்குமூலம் வழங்கினார் முன்னாள் OIC
சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்ற குற்றத்திற்காக தண்டனை!
வரலாற்று சாதனை படைத்த வடக்கு கிழக்கு மக்கள்-மனோ
மக்கள் போராட்டத்தால் கைவிடப்பட்டது அளவீட்டுப்பணிகள்!
காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதங்கள்!
இலங்கையில் செயற்கையாக மழை! பணிகள் ஆரம்பம்!
நிறைவுபெற்றது பாலம்குளத்தின் புனரமைப்பு பணிகள் !
மகிந்தவின் வெற்றி மக்களின் எச்சரிக்கை- அர்ஜுன ரணதுங்க
What are you looking for ?
Do you have a News to share ?