Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
நோயாளர் காவு வண்டி இன்மையால் பறிபோன உயிர்!

விபத்தில் சிக்கிய இளைஞனை மேலதிக சிகிச்சைக்காக நோயாளர் காவு வண்டிக்கான சாரதி இல்லாது காலதாமதமாகியதன் காரணமாகவே உயிரிழந்துள்ளார்.

சிகிச்சைக்காக உரிய நேரத்தில் வேறு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கான நோயாளர் காவு வண்டிக்கான சாரதி இல்லாது காலதாமதமாகியதன் காரணமாகவே இளைஞன் உயிரிழந்துள்ளதாக கூறி, கோபம் கொண்ட அப்பகுதி இளைஞர்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை முற்றுகையிட்டனர்.

அத்துடன் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையானது வெறுமனே பெயர் பலகையோடு மாத்திரம் இயங்குவதாகவும், எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்றும், வைத்தியசாலையில் பணிபுரிகின்ற உத்தியோகத்தர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வது இல்லை என்றும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

இதனால் அப் பிரதேசவாசிகள் பாதிக்கப்படுவதோடு பல உயிரிழப்பு சம்பவங்கள் அரங்கேறுகிறதாகவும், .மக்களுக்கு பயனற்ற நிலையில் இந்த ஆதார வைத்தியசாலை இயங்க தேவையில்லை என்றும் என்றும் முற்றுகையாளர்கள் தெரிவித்ததுடன்,இதுகுறித்த தாமதிக்காமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திருக்கோவில் பிரதேச சபையில் தவிசாளர் .வி.கமலராஜனிடம் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த விபத்தில் உயிரிழந்தவர் திருக்கோவில் 4 மண்டானை கிராமத்தினை சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான அருள்நாயகம் அருள்ராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த விபத்துச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வருகின்றனர்.

 

 

 

video of article
Empty
photos
Facebook Comments
0 votes
recently stories
நெடுந்தீவு பிரதேச சபையின் முதலாவது அபிவிருத்திக் கூட்டம்!
ஆண்டொன்றுக்கு பல ஆயிரம் உயிர்கள் அழிக்கப்படுகின்றன!
”சூழல் புனிதமானது” ஐந்தாவது தடவையாக நல்லதண்ணி பிரதேசத்தில்!
முல்லையில் இடம்பெறும் பெரும்பான்மையின குடியேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!
கோட்டாவை கைது செய்-அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம்
இந்தியாவிலிருந்து வந்தவர்களுக்கான மீள்குடியேற்றப்பதிவுகள் ஆரம்பம்!
நகர அபிவிருத்தி சபையின் உத்தரவாதத்துக்காக காத்திருக்கின்றோம்!மாநகர சபை மேயர்.!
ஹாரி பாட்டரின் கதாநாயகன் வெர்னே ட்ராயர் காலமானார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு கட்டுப்பாடு வேண்டாம்.
இலங்கையில் விரைவில் புதிய முச்சக்கரவண்டி அறிமுகம்!
இறப்பர் தொழிற்சாலை சிரேஷ்ட ஆய்வக மேற்பார்வையாளர் கைது!
சமூக வலைத்தளங்கள் ஊடாக பண மோசடி- மக்களே அவதானம்- சுங்கப் பிரிவு எச்சரிக்கை!
What are you looking for ?
Do you have a News to share ?