Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
தேர்தல் காலத்தில் 85 வேட்பாளர்கள் உட்பட 668 பேர் கைது!

நேற்று முன்தினம் முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பின் பின்னர் நாட்டின் சில பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர  தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில், 85 வேட்பாளர்கள் உட்பட 668 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் காலத்தின் போதும் அதற்குப் பின்னரும் இவர்களை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

இதேவேளை, கடந்த 10ஆம் திகதி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மிகவும் சுமூகமாக நடைபெற்று முடிவதற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பே காரணம் எனவும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

எனவே பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து ஊடகங்களுக்கும் நன்றியைத் தெரிவித்த அவர், இனிவரும் காலங்களிலும் இவ்வாறு சுமூகமான முறையில் நாட்டின் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஊடகங்களின் பங்களிப்பு தமக்கு தேவை என்றும் வலியுறுத்தினார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

video of article
Empty
photos
Facebook Comments
0 votes
recently stories
உதைபந்தாட்ட போட்டியில் கைகலப்பில் விளையாட்டு கழகங்கள்.
முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுமுறிப்புக் குளத்தில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுப்பு
லசந்த கொலை தொடர்பில் இரகசிய வாக்குமூலம் வழங்கினார் முன்னாள் OIC
சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்ற குற்றத்திற்காக தண்டனை!
வரலாற்று சாதனை படைத்த வடக்கு கிழக்கு மக்கள்-மனோ
மக்கள் போராட்டத்தால் கைவிடப்பட்டது அளவீட்டுப்பணிகள்!
காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதங்கள்!
இலங்கையில் செயற்கையாக மழை! பணிகள் ஆரம்பம்!
நிறைவுபெற்றது பாலம்குளத்தின் புனரமைப்பு பணிகள் !
மகிந்தவின் வெற்றி மக்களின் எச்சரிக்கை- அர்ஜுன ரணதுங்க
What are you looking for ?
Do you have a News to share ?