Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனத் திகதி பிற்போடப்பட்டது!

வட,கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 15ஆம் திகதி அன்று கல்வி அமைச்சின் ஊடாக நியமனம் வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த ஏற்பாட்டு திகதி பிற்போடப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சிற்கு முன்னால் வடகிழக்கு தொண்டர் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் நியமனம் வழங்கப்பட வேண்டும் எனவும்  கோரிக்கை விடுத்தனர்.

இந்த விடயம்  தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வேலுசாமி இராதாகிருஸ்ணன்,

வடகிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 15ஆம் திகதி அன்று கல்வி அமைச்சின் மூலமாக நியமனம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஆனால் அநேகரின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த நியமனம் பிற்போடப்பட்டள்ளது.

அதற்கு காரணம் அந்த வழங்கப்படவிருந்த நியமனத்தில் ஒரு சிலருடைய தகவல்கள் முறையாக இல்லாத காரணத்தால் அவர்களின் பெயர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்படவில்லை எனவே இது தொடர்பாக பலரும் கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.அதனை தொடர்ந்தே இந்த நியமனம் பிற்போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சு அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது அதற்கு பிரதமரும் அனுமதி வழங்கியுள்ளார்.எனவே எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்பு அனைவருக்கும் அதனை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துவருகின்றது.

எனவே சம்பந்தப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் அமைதியாக இருந்து அதனை பெற்றுக் கொளளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.இதற்காக போராட்டம் செய்வதை நிறுத்துமாறும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

video of article
Empty
photos
Facebook Comments
0 votes
recently stories
உதைபந்தாட்ட போட்டியில் கைகலப்பில் விளையாட்டு கழகங்கள்.
முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுமுறிப்புக் குளத்தில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுப்பு
லசந்த கொலை தொடர்பில் இரகசிய வாக்குமூலம் வழங்கினார் முன்னாள் OIC
சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்ற குற்றத்திற்காக தண்டனை!
வரலாற்று சாதனை படைத்த வடக்கு கிழக்கு மக்கள்-மனோ
மக்கள் போராட்டத்தால் கைவிடப்பட்டது அளவீட்டுப்பணிகள்!
காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதங்கள்!
இலங்கையில் செயற்கையாக மழை! பணிகள் ஆரம்பம்!
நிறைவுபெற்றது பாலம்குளத்தின் புனரமைப்பு பணிகள் !
மகிந்தவின் வெற்றி மக்களின் எச்சரிக்கை- அர்ஜுன ரணதுங்க
What are you looking for ?
Do you have a News to share ?