Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள செயற்படும் கட்சிகளுடன் இணைய தயார்- எதிர்க்கட்சித்தலைவர்

தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக செயற்படும் கட்சிகளுடன் இணைந்து கொள்வதற்கு பின்னிற்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய பலமான ஆட்சியை ஏற்படுத்துவதற்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பின்னிற்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கும் கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று திங்கட்கிழமை காலை திருகோணமலையிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா சம்பந்தனின் இல்லத்தில்  நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன், முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேசசபை தேர்தலில் போட்டியிட்டவர்கள் உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது உரையாற்றிய போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச தமிழர்களின் எதிரியல்ல !

அத்துடன் மைத்திரி ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என வலியுறுத்திய இரா. சம்பந்தன், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒத்தழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

video of article
Empty
photos
Facebook Comments
0 votes
recently stories
உதைபந்தாட்ட போட்டியில் கைகலப்பில் விளையாட்டு கழகங்கள்.
முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுமுறிப்புக் குளத்தில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுப்பு
லசந்த கொலை தொடர்பில் இரகசிய வாக்குமூலம் வழங்கினார் முன்னாள் OIC
சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்ற குற்றத்திற்காக தண்டனை!
வரலாற்று சாதனை படைத்த வடக்கு கிழக்கு மக்கள்-மனோ
மக்கள் போராட்டத்தால் கைவிடப்பட்டது அளவீட்டுப்பணிகள்!
காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதங்கள்!
இலங்கையில் செயற்கையாக மழை! பணிகள் ஆரம்பம்!
நிறைவுபெற்றது பாலம்குளத்தின் புனரமைப்பு பணிகள் !
மகிந்தவின் வெற்றி மக்களின் எச்சரிக்கை- அர்ஜுன ரணதுங்க
What are you looking for ?
Do you have a News to share ?