Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
தமிழ் மக்களுக்கு சொந்தமானதை மீளக்கையளிக்க இலங்கை அரசு தவறியுள்ளது- முதலமைச்சர்!

தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள், வீடுகள் மற்றும் ஏனைய சொத்துக்களை மீளக் கையளிக்கப்பதற்கு  இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் நெல்லை மாவட்டத்தில் ஆழ்வார் குறிச்சியில் இடம்பெற்ற நூல் வெளியீட்டை அடுத்து செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங.கையில்  இடம்பெற்றதாகக் கூறப்படும்  இனப்பிரச்சினையின் போது தமிழ் மக்களின் சொத்துக்கள் சகோதர மொழிபேசும்  மக்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாகவும்  கூறியுள்ளஅவர், 

இனப் பிரச்சினைக்கு மத்தியில் இலங்கையில் வாழ நினைக்கும் தமிழ் மக்கள் சகோதர மொழி பேசுபவர்களால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவருவதாகவும், 

இனப் பிரச்சினை காரணமாக நாட்டை விட்டு வெளியேறி இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு சென்றுள்ள 10 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும்  இலங்கை  அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரன்  சுட்டிக்காட்டினார். 

தமிழ் மக்களின் சொத்துக்களை பல  சகோதர மொழி பேசும் மக்கள் ஆக்கிரமித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அரசாங்கமும் பல பிரச்சினையை கொடுப்பதாக கூறியுள்ளார்.

இலங்கைக்கும்,  இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் பலவீனமடையவில்லை என்கின்ற போதிலும் சீனாவுடனான இலங்கையின்  உறவு வலுவடைந்துள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளதாகவும் கூறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது. 

video of article
Empty
photos
Facebook Comments
0 votes
recently stories
நெடுந்தீவு பிரதேச சபையின் முதலாவது அபிவிருத்திக் கூட்டம்!
ஆண்டொன்றுக்கு பல ஆயிரம் உயிர்கள் அழிக்கப்படுகின்றன!
”சூழல் புனிதமானது” ஐந்தாவது தடவையாக நல்லதண்ணி பிரதேசத்தில்!
முல்லையில் இடம்பெறும் பெரும்பான்மையின குடியேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!
கோட்டாவை கைது செய்-அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம்
இந்தியாவிலிருந்து வந்தவர்களுக்கான மீள்குடியேற்றப்பதிவுகள் ஆரம்பம்!
நகர அபிவிருத்தி சபையின் உத்தரவாதத்துக்காக காத்திருக்கின்றோம்!மாநகர சபை மேயர்.!
ஹாரி பாட்டரின் கதாநாயகன் வெர்னே ட்ராயர் காலமானார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு கட்டுப்பாடு வேண்டாம்.
இலங்கையில் விரைவில் புதிய முச்சக்கரவண்டி அறிமுகம்!
இறப்பர் தொழிற்சாலை சிரேஷ்ட ஆய்வக மேற்பார்வையாளர் கைது!
சமூக வலைத்தளங்கள் ஊடாக பண மோசடி- மக்களே அவதானம்- சுங்கப் பிரிவு எச்சரிக்கை!
What are you looking for ?
Do you have a News to share ?