Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
சுமார் 20 இலட்சத்திற்கும்அதிகமான கடல் மீன்பிடிப்படகு மற்றும் வலைகள் என்பன தீக்கிரை

 

வாகரை பனிச்சங்கேணி கடற்கரையில்மட்டக்களப்பு கோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் கதிர்காமத்தம்பி சந்திரமோகன் என்பவருக்குச் சொந்தமான கடல் மீன்பிடிப்படகு மற்றும் வலைகள் என்பன இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ள.

இதன் பெறுமதி சுமார் 20 இலட்சத்திற்கும் அதிகமாகும். கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில்  போட்டியிட்டு வட்டாரத்தில் வெற்றி பெற்று தற்போது வாகரைப் பிரதேச சபையின் உறுப்பினராக இருக்கின்றேன்.

கோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபையில் முதல் நாள் அமர்வில் தவிசாளர் தெரிவிற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் அவர்களுக்கு ஆதரவு தரும்படி என்னிடம் கோரினார்கள் அவர்கள் தவிசாளராகவும், முஸ்லீம் உறுப்பினர் ஒருவரை பிரதித் தவிசாளராகவும் நியமிப்பதற்கு இருந்தனர்.

அது எனக்குப் பிடிக்கவில்ல. அத்துடன் எனது தலைமையின் கட்டளையின் பிரகாரம் நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எனது ஆதரவை வழங்கினேன்.

அதன் பிற்பாடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் பல்வேறு விதத்தில் அச்சுறுத்தப்பட்டேன்.

விளைவாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என நான் சந்தேகப்படுகின்றேன். இது தொடர்பில் வாகரைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.

இது தொடர்பான குற்றவாளியைக் கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்குவதோடு, எனது எரியுண்ட படகு மற்றும் வலைகளுக்கான நட்டஈடையும் பெற்றுத் தர வேண்டும் என்று தெரிவித்தார்.

 

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

video of article
Empty
photos
Facebook Comments
0 votes
recently stories
நெடுந்தீவு பிரதேச சபையின் முதலாவது அபிவிருத்திக் கூட்டம்!
ஆண்டொன்றுக்கு பல ஆயிரம் உயிர்கள் அழிக்கப்படுகின்றன!
”சூழல் புனிதமானது” ஐந்தாவது தடவையாக நல்லதண்ணி பிரதேசத்தில்!
முல்லையில் இடம்பெறும் பெரும்பான்மையின குடியேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!
கோட்டாவை கைது செய்-அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம்
இந்தியாவிலிருந்து வந்தவர்களுக்கான மீள்குடியேற்றப்பதிவுகள் ஆரம்பம்!
நகர அபிவிருத்தி சபையின் உத்தரவாதத்துக்காக காத்திருக்கின்றோம்!மாநகர சபை மேயர்.!
ஹாரி பாட்டரின் கதாநாயகன் வெர்னே ட்ராயர் காலமானார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு கட்டுப்பாடு வேண்டாம்.
இலங்கையில் விரைவில் புதிய முச்சக்கரவண்டி அறிமுகம்!
இறப்பர் தொழிற்சாலை சிரேஷ்ட ஆய்வக மேற்பார்வையாளர் கைது!
சமூக வலைத்தளங்கள் ஊடாக பண மோசடி- மக்களே அவதானம்- சுங்கப் பிரிவு எச்சரிக்கை!
What are you looking for ?
Do you have a News to share ?