Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
கேப்பாபுலவு மக்கள் போராட்டத்துக்கு ஆணை வழங்கியது முல்லை நீதிமன்றம்!

கேப்பாபுலவு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துவரும் மக்களை பொதுமக்களுக்கு இடையூறின்றி போராட்டத்தை தொடரலாமென முல்லை நீதிமன்றம் மீண்டும் ஆணை வழங்கியது.

கேப்பாபுலவில் போராட்டம் மேற்கொண்ட மக்கள் மீது முள்ளியவளை பொலீஸார் மேற்கொண்ட வழக்கு விசாரணை இன்று (12.02.18) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்பதற்காக கடந்த வருடம்  ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் இன்று 349 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணிகளில் படையினர் அபகரித்துள்ள காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள் கடந்த வருடம் மார்கழி 28 ம் திகதி மக்கள் முன்னிலையில் படைத்தரப்பில் இருந்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கேப்பாபுலவு பகுதியில் 111.5 ஏக்கர் காணிகளும் சீனியாமோட்டை பகுதியில் மான 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக 133.34 ஏக்கர் காணிகள் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த காணிகளுக்குள் கடந்த 1 ஆம் திகதி மக்கள் சென்றனர். இந்த நிலையில் இன்னும் தமது காணிகளில் விடுவிக்க வேண்டியுள்ள 104 குடும்பங்களுக்கு சொந்தமான 181 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடருமென தெரிவித்து இன்று 349 ஆவது நாளாகவும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இதேவேளை இவர்கள் கடந்த 4 ம் திகதி இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தில் துக்கதினம் அனுஸ்ரித்து கேப்பாபுலவு விடுவிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஆலயத்துக்கு சென்றவேளை பொலிசார் இடைமறித்ததால் குழப்ப நிலை ஏற்ப்பட்டிருந்தது இதனை தொடர்ந்து கேப்பாபுலவு மக்கள் 5 பேர் மீது முள்ளியவளை பொலிசாரால் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பில் போராட்டத்தில் சம்மந்தப்படாதவரது பெயருக்கும் வழக்கு பதியப்பட்டுள்ளது எனவும் எம்மை சொந்த நிலத்தில் குடியேற்றினால் நாம் என் போராடுகிறோம் என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததோடு தமக்கு உரிய நீதிகிடைக்க வேண்டுமென கேட்டிருந்தனர்.

இந்நிலையில் கேப்பாபுலவில் போராட்டம் மேற்கொண்ட மக்கள் மீது முள்ளியவளை பொலீஸார் மேற்கொண்ட வழக்கு விசாரணை இன்று(12.02.18) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

மன்றில் வழக்கு தொடுனர்களான முள்ளியவளை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் எதிர்தரப்பு வாதிகளான கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஜவர் ஆகியோர்முன்னிலையாகி இருந்தனர் .

இதன்போது சட்டவாளர்களான வி.மணிவண்ணன், பரஞ்சோதி உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த சட்டவாளர்கள் கேப்பாபுலவு மக்களுக்காக வாதிட்டுள்ளார்கள்.

இந்த வழக்கின் விசாரணைகளின் பின்னர் எதிர்காலத்திலும் கேப்பாபுலவு மக்கள் ஜனநாயக உரிமைக்காக போராடலம் என்றும் மக்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாது மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்ற அறிவுறுத்தலை வழக்கி நீதிபதி வழக்கினை கிடப்பில் போட்டுள்ளார்.

இதேவேளை போராட்டம் ஆரம்பித்த காலப்பகுதியிலும் பொலிசார் வழக்கு ஒன்றை தொடர்ந்து அதன்போதும் மக்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாது மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என நீதிமன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

video of article
Empty
photos
Facebook Comments
0 votes
recently stories
உதைபந்தாட்ட போட்டியில் கைகலப்பில் விளையாட்டு கழகங்கள்.
முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுமுறிப்புக் குளத்தில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுப்பு
லசந்த கொலை தொடர்பில் இரகசிய வாக்குமூலம் வழங்கினார் முன்னாள் OIC
சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்ற குற்றத்திற்காக தண்டனை!
வரலாற்று சாதனை படைத்த வடக்கு கிழக்கு மக்கள்-மனோ
மக்கள் போராட்டத்தால் கைவிடப்பட்டது அளவீட்டுப்பணிகள்!
காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதங்கள்!
இலங்கையில் செயற்கையாக மழை! பணிகள் ஆரம்பம்!
நிறைவுபெற்றது பாலம்குளத்தின் புனரமைப்பு பணிகள் !
மகிந்தவின் வெற்றி மக்களின் எச்சரிக்கை- அர்ஜுன ரணதுங்க
What are you looking for ?
Do you have a News to share ?