Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
கடற்கரையில் தோண்டிய குழியில் வெடிபொருட்கள்!

மன்னார் பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரை பகுதியில் பருவகால மீன்பிடித் தொழிலை மேந்கொண்டு வரும் வங்காலை மற்றும் தாழ்வுபாடு மீனவர்கள் மேற்படி பகுதியில்  வாடி அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில்  மீனவர் ஒருவர் குறித்த கடற்கரை பகுதியில் குழி தோண்டும் போது  இரும்பு பெட்டியொன்று இருப்பதை அவதானித்த அவர் அருகிலுள்ள கடற்படையினரிடம் இது தொடர்பில் அறிவித்து பின் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சென்று பார்வையிட்ட போது மோட்டார் குண்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் பொலிசார் பாதுகாப்பு வழங்கியுள்ளதுடன் நேற்று மதியம் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.

இதன்போது குறித்த குழியில் இருந்து 81 ரக மோட்டார் குண்டுகள் 15 மற்றும் 61 ரக மோட்டார் குண்டு என்பன மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட குண்டுகள் பேசாலை பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் வைத்து செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

video of article
Empty
photos
Facebook Comments
0 votes
recently stories
நெடுந்தீவு பிரதேச சபையின் முதலாவது அபிவிருத்திக் கூட்டம்!
ஆண்டொன்றுக்கு பல ஆயிரம் உயிர்கள் அழிக்கப்படுகின்றன!
”சூழல் புனிதமானது” ஐந்தாவது தடவையாக நல்லதண்ணி பிரதேசத்தில்!
முல்லையில் இடம்பெறும் பெரும்பான்மையின குடியேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!
கோட்டாவை கைது செய்-அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம்
இந்தியாவிலிருந்து வந்தவர்களுக்கான மீள்குடியேற்றப்பதிவுகள் ஆரம்பம்!
நகர அபிவிருத்தி சபையின் உத்தரவாதத்துக்காக காத்திருக்கின்றோம்!மாநகர சபை மேயர்.!
ஹாரி பாட்டரின் கதாநாயகன் வெர்னே ட்ராயர் காலமானார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு கட்டுப்பாடு வேண்டாம்.
இலங்கையில் விரைவில் புதிய முச்சக்கரவண்டி அறிமுகம்!
இறப்பர் தொழிற்சாலை சிரேஷ்ட ஆய்வக மேற்பார்வையாளர் கைது!
சமூக வலைத்தளங்கள் ஊடாக பண மோசடி- மக்களே அவதானம்- சுங்கப் பிரிவு எச்சரிக்கை!
What are you looking for ?
Do you have a News to share ?