Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
ஆலயம் சென்று திரும்பியவர்கள் மீது வாள் வெட்டு- இருவர் காயம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கோயிலுக்குச் சென்று திரும்பியவர்களை வீதியில் நின்ற குழுவொன்று கோடரியால் வெட்டியதில், இருவர் காயமடைந்தனர்

 மண்டான் சந்திப் பகுதியில் இடம்பெற்றது இந்தத் தாக்குதலில் தலை மற்றும் கைகளில் வெட்டுக்காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்

மீசாலை வடக்கைச் சேர்ந்த சிறிதரன் சிறிப்பிரபு (வயது – 20), மந்துவில் கிழக்கைச் சேர்ந்த துரைமணி சயிந்தன் (வயது – 27) ஆகியோரே வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, வவுனியாவில் இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதால் வாள்வெட்டில் முடிந்தது. அதில் சிக்கி இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் வவுனியா சிதம்பரபுரத்தில் புதுவருடப்பிறப்பன்று இடம்பெற்றது. இரண்டு இளைஞர்களுக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது என்றும் அதில் காயமடைந்தவரின் தந்தையார் பின்னர் வாளால் வெட்டினார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது

அதனால் ஒருவர் தலைப்பகுதியில் படுகாயமடைந்தார். மற்றொருவர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இவ்வளவுக்கும் காரணம் மதுபோதை என்று கூறப்படுகிறது.

ஆனால் விசாரணைகளின் பின்னரே மேலதிக விடயங்களைக் கூறமுடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 55 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை இடம்பெறுகிறது என்று சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

video of article
Empty
photos
Facebook Comments
0 votes
recently stories
நெடுந்தீவு பிரதேச சபையின் முதலாவது அபிவிருத்திக் கூட்டம்!
ஆண்டொன்றுக்கு பல ஆயிரம் உயிர்கள் அழிக்கப்படுகின்றன!
”சூழல் புனிதமானது” ஐந்தாவது தடவையாக நல்லதண்ணி பிரதேசத்தில்!
முல்லையில் இடம்பெறும் பெரும்பான்மையின குடியேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!
கோட்டாவை கைது செய்-அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம்
இந்தியாவிலிருந்து வந்தவர்களுக்கான மீள்குடியேற்றப்பதிவுகள் ஆரம்பம்!
நகர அபிவிருத்தி சபையின் உத்தரவாதத்துக்காக காத்திருக்கின்றோம்!மாநகர சபை மேயர்.!
ஹாரி பாட்டரின் கதாநாயகன் வெர்னே ட்ராயர் காலமானார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு கட்டுப்பாடு வேண்டாம்.
இலங்கையில் விரைவில் புதிய முச்சக்கரவண்டி அறிமுகம்!
இறப்பர் தொழிற்சாலை சிரேஷ்ட ஆய்வக மேற்பார்வையாளர் கைது!
சமூக வலைத்தளங்கள் ஊடாக பண மோசடி- மக்களே அவதானம்- சுங்கப் பிரிவு எச்சரிக்கை!
What are you looking for ?
Do you have a News to share ?