Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description

தமது கல்லூரியின் மறைந்த முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர் ஜெயக்குமார் கீர்த்திகன் ஞாபகார்த்தமாக, யாழ். மாவட்ட பாடசாலைகளின் ஆண்கள், பெண்கள் கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் கொக்குவில் இந்துக் கல்லூரி தமது கூடைப்பந்தாட்டத் திடலில் நடத்திய கூடைப்பந்தாட்டத் தொடரில் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை சம்பியனாகியது.

10 பாடசாலைகள் பங்குபற்றிய இத்தொடரின் அரையிறுதியில் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை, கொக்குவில் இந்துக் கல்லூரியை வென்றும் யாழ். மத்திய கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரியை வென்றும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற யாழ். மத்திய கல்லூரிக்கெதிரான இறுதிப் போட்டியின் முதற்காற்ப்பகுதி மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலையின் கைகளில் இருக்க அப்பாடசாலை, 21-13 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது காற்பகுதியில், யாழ். மத்திய கல்லூரி சிறப்பாக விளையாடியபோதும் இக்காற்பகுதி முடிவிலும் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை, 31-25 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

மூன்றாவது காற்பகுதியில் ஆதிக்கத்தை வெளிப்படுத்திய மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை, இக்கால்பகுதி முடிவில் 43-33 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்நிலையில், நான்காவது கால்பகுதி யாழ். மத்திய கல்லூரியின் கைகளில் இருந்தது. அடுத்தடுத்து, புள்ளிகளைப் பெற்ற யாழ். மத்திய கல்லூரி ஒரு கட்டத்தில் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலையின் புள்ளிகளை முந்திய நிலையில் இருந்தது. எனினும், இறுதி செக்கன்களில் தங்கள் வெற்றிக்குத் தேவையான புள்ளிகளைப் பெற்ற மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை, 57-56 என்ற புள்ளிகள் கணக்கில் இறுதியில் வென்று, மூன்றாவது முறையாக இத்தொடரில் தொடர்ச்சியாக சம்பியனாகியது.

 

இவ்விறுதிப் போட்டியில் 26 புள்ளிகளைப் பெற்ற மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலையின் யோகநாதன் சிம்ரோன் இறுதிப் போட்டியின் நாயகனாகவும் யாழ். மத்திய கல்லூரியின் உதயகுமார் சங்கீர்த்தனன் தொடரின் நாயகனாகவும் தெரிவாகினர்.

Photos
Rate
0 votes
Info
06.05.2018 (06.05.2018)
92 Views
0 Subscribers
Sri Lanka, Sri Lanka
Facebook Comments
Other நம்மஊர் in this Category
Richmondhill Pillayar Kovil நவம்பர் 13 2018 அன்று நடந்த சூரன் போர்
4 days ago · From PoongaSenthur
பெரும் திரளன பத்தர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
9 days ago · From PoongaSenthur
கமநல சேவைநிலையம் கரவெட்டி பத்து லட்சம் பலாமரக்கன்றுகள் நடுகை
9 days ago · From PoongaSenthur
யா கரணவாய் வேதாரணியேஸ்வரா வித்தியாலய புதிய கட்டடத் திறப்பு விழா. பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்.
9 days ago · From PoongaSenthur
ர றெம்சன் வயது 15 பஞ்சகரும சிகிச்சையும் அக்கு பஞ்சர் சிகிச்சையும் வழங்கப்பட்டு 90 வீதம் சுகம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
21.10.2018 · From PoongaSenthur
மாலைசந்தை மைக்கலின் நேசக்கரம் ஊடக வாழ்வாதார உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
09.10.2018 · From PoongaSenthur
பாடசாலைகளில் பழ மரக்கன்றுகளை நாட்டு விழா நடைபெற்றது
09.10.2018 · From PoongaSenthur
கரவெட்டி பிரதேச சபை தவிசாளரின் நேரடியான கவனத்திற்கு கொண்டு வந்ததால் புதிய சந்தையில் உள்ள குறைகளை பார்வையிட்டு செப்பனிடப்பட்டது.
09.10.2018 · From PoongaSenthur
வியாபாரிமூலை நாச்சிமார் ஆலய முன்றலில் திரு.கதிரமலை தலைமையில் நடைபெற்றது.
20.04.2018 · From Jaso
உபயகதிர்காமம் UK விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.
16.04.2018 · From Mahalingam
Recommend