Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description

கரவெட்டி பிரதேச செயலகத்தின் கிரிக்கெட் இறுதிபோட்டியானது கடந்த புதன் கிழமை இமையாணன் மத்திய விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.. இந்த போட்டியில் கொலின்ஸ் அணியினை எதிர்த்து ஸ்பேஸ் அணி மோதியது.

இந்த போட்டியிலே இரண்டு விக்கட்டுகளால் ஸ்பேஸ் அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது  கொலின்ஸ் அணி. முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்பேஸ் அணி  டெஸ்மன் ,பவன் இணையானது சிறந்த ஆரம்பத்தை வழங்கியது, தொடர்ந்து மதுசனின் சிறப்பான துடுப்பாட்டத்தினால் 15 பந்து பரிமாற்றம் நிறைவில் 6 இலக்குகளை இழந்து 96  ஓட்டங்களை குவித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொலின்ஸ் ஆரம்ப இணைப்பாட்ட ஜோடியான சுகந்தன், ஜெயச்சந்திரன் ஆகியோர் சிறப்பான ஆரம்பத்தை கொடுத்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய தாஸ் அதிரடியாக ஓட்டங்களை பெற்று கொடுத்து ஆட்டம் இழந்தார்.இறுதிக்கட்ட பரபரப்பில் துவி,வரகுணன் சிறப்பான இணைப்பாட்ட த்தை வழங்க, இறுதியில் கோகுலன்,திருக்கோகுலன்  இணையானது 14.2 பந்து பரிமாற்றம் நிறைவில் 8 இலக்குகளை இழந்து 100 ஓட்டங்களை பெற்று வெற்றியை பெற்று கரவெட்டி பிரதேச செயலக கிரிக்கெட்டில்   சம்பியனாகியது.

Photos
Comments
Order by: 
Per page:
 
  • There are no comments yet
   Comment Record a video comment
 
 
 
     
Rate
0 votes
Info
03.02.2018 (03.02.2018)
20 Views
0 Subscribers
கரவெட்டி
Sri Lanka, Sri Lanka
Map View
Recommend