Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description

அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று பதுர் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கற்றல் கற்பித்தல் விருத்திக்காக நடைபெற்ற சிறுவர் சந்தை நிகழ்வு பாடசாலையின் அதிபர் மௌலவி எம்.கே.அஹமட் சியாத் தலைமையில் இன்று (10.04.2018)பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் மௌலவி ஏ.எம்.றஹ்மத்துல்லா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறுவர் சந்தையினை திறந்து வியாபாரத்தினை உத்தியோகபூர்மாக ஆரம்பித்து வைத்தார்.

இந்த வைபவத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.பௌஸ், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் ஏ.கே.ஏ.பாஹீம், ஆரம்பப்பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.அபூதாஹிர்,பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தரும்,சேவைக்கால ஆசிரிய ஆலோசகருமான எம்.ஏ.தாஹிர், முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.இக்பால், ஆசிரிய ஆலோசகர் மௌலவி என்.ரீ.நஸீர், ஜீ.ஐ.இசட் நிறுவனத்தின் உத்தியோகத்தர் திருமதி சந்திரிக்கா, பாடசாலை அபிவிருத்திக்குழுவின் செயலாளர் டபிள்யு.றக்கீப், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் முன்னாள் செயலாளர் எம்.அனஸ் அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பாடசாலையின் அபிவிருத்திக்குழுவின் உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் 
நலன்விரும்பிகள் ஜீ.ஐ.இசட் நிறுவனத்தின்பலரும் கலந்து கொண்டு சிறுவர் சந்தையில் பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.

Photos
Rate
0 votes
Info
10.04.2018 (10.04.2018)
15 Views
0 Subscribers
Facebook Comments
Other நம்மஊர் in this Category
வியாபாரிமூலை நாச்சிமார் ஆலய முன்றலில் திரு.கதிரமலை தலைமையில் நடைபெற்றது.
5 days ago · From Jaso
உபயகதிர்காமம் UK விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.
8 days ago · From Mahalingam
கொற்றாவத்தை அமெரிக்கன் கலவன் பாடசாலையில் அதிபர் தலைமையில் இடம் பெற்றது.
8 days ago · From Mahalingam
கரவெட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது
12 days ago · From Mahalingam
தில்லையம் பலப்பிள்ளையார் கோவில் 7ம் திருவிழா
12 days ago · From Mahalingam
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் உல்லியனொல்லை ஆலயமுற்றலில் நடைபெற்றது.
08.04.2018 · From Mahalingam
Recommend