Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
ஜோதிடம்
   
காலம் பகல் 12.23 மணிக்கு மன்மதவருடம் பிறக்கின்றது. சிறப்பு வர்ணங்கள் வெள்ளை, சிவப்பு, துலாம், விருச்சிகம், தனு, மகரம், கும்பம், மீனம்.

2015-2016 மன்மதவருடம்

01.04.2015 செவ்வாய்க்கிழமை (14.04.2015) அபரபக்க தசமித்திதியும்அவிட்ட நட்சத்திரம் 2ஆம் பாதம் கடக லக்கினம், குருகாலவேரை, தாமத குண
வேளையில் குதிரை வாகனம், மயில் நடைத் தொழில் செய்யும் காலம் பகல் 12.23
மணிக்கு மன்மதவருடம் பிறக்கின்றது. சிறப்பு வர்ணங்கள் வெள்ளை, சிவப்பு,
புண்ணியகாலம் காலை 08.23 தொடக்கம் 04.03 வரை.
கைவிசேடம்
15.04.2015 புதன்கிழமை காலை 09.57 தொடக்கம் 10.15வரை பகல் 10.23 தொடக்கம்
11.58 வரை பிற்பகல் 02.10 தொடக்கம் 04.05 வரை.

                    வரவு –செலவு
மேடம்     -  14---------14
இடபம்-         8---------8
மிதுனம்       11---------05
கடகம் –        11--------11
சிங்கம்-         8--------14
கன்னி-          11--------05
துலாம்-         8---------8
விருச்சிகம் 14------14
தனு                 2---------8
மகரம்-           5---------2
கும்பம்-         5---------2
மீனம்-           2---------8

-------------------------------------------------------------------------------------------------------------------------

தெட்சணாமூர்த்தி சுலோகம்
வியாழ பகவானால் கெடுபலாபலன்கள் நீங்கிவிட தினமும் 21 தடவைகள் சொல்ல வேண்டும்.
”ஓம் !
தெட்சணா மூர்த்தியே வித்மஹே
த்யாநஸ்த்தாயே தீமஹி
தந்தோதீச ப்ரசோதயாத்”
என்ற வாக்கியங்களை உச்சாடனம் செய்யுங்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

வியாழ வக்கிரகம்
21.12.2015 தொடக்கம் 07.02.2016 வரை வியாழபகவான் முன்னோக்கி
கன்னிராசியில் நின்று பின்னர் பழையபடி சிங்கராசிக்குச் செல்வார்.
குருவின் 5,7,9 பார்வைகள் நன்மைகளைக் கொண்டுவரும்.05.07.2015தொடக்கம் வியாழ மாற்றப் பலாபலன்கள்

துலாம்(சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3)
ஏழரைச் சனி கடைக்கூறு நடக்கையில் 05.07.2015 குருபகவான் 10இல் நீங்கி 11இல் பெயர்வது நினைத்ததை நடத்தி காட்டுவீர்கள். எக் காரியம் செய்ய நேரிடும் போதும் பொறுமை, சகிப்புத் தன்மையை கைவிடவேண்டாம். கைவிட்ட பயணம் மீண்டும் தொடரும். விவாகம் ஒப்பேறும். புதியமனை அமைக்க முற்படல். தேங்கிய
பொருட்கள் புதிய யுக்தியால் விற்பனையாகும். தற்காலிகப் பணி
நிரந்தரமாகும். பிரிந்தவர் ஒன்று சேரல். வாகன யோகங்கிட்ட சகோதரர் உதவுதல். நோய் நீங்கி தைரியம் தக்கவைக்கும். இடைத்தங்கலில் இருப்போர் இலக்கினை அடைவர். உயர்கல்வியும், வெளியூரில் கற்பதற்கு மாணவர் விசா கிட்டும். புதிய ஜீவனின் உருவாக்கம். சுவீப் அதிஷ்ட்டம் உண்டு. பிதாவின்
சௌக்கியம் மேம்படல். மங்கள காரியம் ஏற்படல். கடன் தொல்லை நீங்கிவிடல். வங்கிக்கடன் கைக்கெட்டல். கனடாவிற்கு வெளிக்கிட்ட பயணம் கொழும்புடன் ஸ்தம்பித்துவிடலாம். சுற்றுப்புறச் சூழல் டெங்கு பரவ தடுப்பு எடுக்காமையினால் தண்ட நிலை. நிலுவை கூடியதனால் பொருட்கொள்வனவில் தடங்கல்.
கடனைப் பெற முறையீடு செய்தல். வாகன யோகங்கிட்ட வெளியூர்பணவரவு. பழுதான உணவுப் பண்டத்தினால் தேக நலன் கெட்டுவிடுதல். மாணவர்கள், ஆசிரியர்கள் உறவில் விரிசல் நிலை.. மருத்துவச் செலவீனம் அதிகரித்தல். பயணம், தொழில்
காரணமாக பிரிவினை. பெற்றோரின் நோய் நிலையினால் பதவியை
வெளியூர்ப்பயணத்தைக் கைவிடல். திருமண முயற்சிகளை இரகசியமான முறையில் மேற்கொள்ளல். நோயினால் இன்பங்கள் பாதிக்கப்படல். மழலைக்குப் பெயரிடுவதில் தம்பதியர் மத்தியில் களேபரம் ஏற்படல். ------------------------------------------------------------------------------------------------------------------------

விருச்சிகம் (விசாகம் 4, அனுசம், கேட்டை)
ஏழரைச்சனி நடைபெறுகின்ற வேளையில் பாக்கிய குரு (9) நீங்கி 05.07.2015 தொடக்கம் ஒரு வருடத்திற்கு 10இல் வியாழன் நிற்கையில் பதவி, தொழிலை உயிரினும் மேலாக நேசியுங்கள். அதிகாரிகளின் அடவடித்தனங்களினால் தொழிலுக்கு கேடு வரலாம். அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல வெளியூர் வேலையை நம்பி உள்ள தொழிலையும் இழந்து போகலாம். காசோலை மோசடிகள்
கனகச்சிதமாக நிறைவேறும். நயவஞ்சகர்களினால் சூழப்பட்டு மோசடி தக்கவைக்கும். சந்தேகக் கேடு சந்தோஷக் கேட்டினைக் கொண்டுவரும். குடும்பத்தில் கவின் நிலையைக் கொண்டுவர முயற்சிக்கவும். சொத்துப் பிரச்சினை தீர நீதி ஸ்தலங்களுக்கு செல்ல முற்படல். பணம் பெறுகையில் சரியாகக் கணக்கிடவும். சத்திரசிகிச்சை ஏற்படும் நிலைப்பாடுண்டு. தெய்வ
நம்பிக்கையைக் கைவிடவேண்டாம். ஆவணக் குறைபாட்டினால் தண்டம் பெறுதல். தலையணை மந்திரத்தினால் சகோதர உறவில் விரிசல் ஏற்படும். கன்னியர் துணையின்றி தனித்துச் செல்ல வேண்டாம். வங்கிக்கடன் கிட்டும். பெற்றோருக்கு வெளிநாடு செல்லும் யோகம் மக்களினால் கிடைக்கும். புதிய
ஜீவன் உருவாகிய மகிழ்வு ஏற்படல். காணாக்கடி, மந்திகள், குளவிகள், மயிர்க்கொட்டிகள் என்பவற்றினால் பாதிப்பேற்படும். வரவிருந்த விபத்து மயிரிழையில் தப்பிவிடல். தெய்வநம்பிக்கையினால் தலைக்கு வந்தது
தலைக்கவசத்துடன் சென்று விடும். வெளியீடுகளில் ஆர்வம் காட்டுதல். சரியாகக் கணக்கிட்டு பணத்தினைப் பெறுங்கள். மனைவியின் தேக நலன் பாதிப்படையும். ----------------------------------------------------------------------------------------------------------------------------


தனு (மூலம், பூராடம், உத்தராடம்1).                                                                             
வாலியைப் பட்டமிழக்க வைத்த அட்டமத்து வியாழன் (8) நீங்கியமை அதிஷ்டத்தின் திறவுகோல். பல வழிகளாலும் உங்களை உயர்த்திவைக்கப்போகின்றது. 05.07.2015 தொடக்கம் 6இல் வியாழன் வருவதினால் பிரளயங்கள் நீங்கிவிடும். ஏழரைச்சனி
இடைக்கிடையே வருந்தச் செய்யினும் முடிவில் வெற்றித்திருமகனாக விளங்குவீர்கள். பிறர் உதவியினால் வெளியூர்ப்பயணம் உண்டு. தடைப்பட்டிருந்த விவாகம் கைகூடும். பரீட்சை முடிவுகள் வசந்த காலத்தை ஏற்படுத்தும். நோய் நீங்கும். சேமிப்பில் கவனம் வையுங்கள். மனைவியினால்
யோகமுண்டு. வெளியூர் உறவினர்கள் வருகைதருதல். வெளியீடுகளில் ஆர்வம்கொள்ளல். பங்குத் தொழிலைக் கைவிட்டு தனித்தியங்க முற்படல்.வங்கித் தொடர்பினால் பொருளாதார முன்னேற்றம் தக்கவைத்தல். புத்திரப் பேறுண்டு.
சுவீப் அதிஷ்ட்டம் உண்டு. ஆவணங்கள் தவறிப்போகலாம். நிலுவை கூடியதால் தொடர்புகள் தற்காலிகமாக துண்டிக்கப்படலாம். வங்கிக்கணக்கிலும் மோசடிகள் ஏற்படலாம். சகோதரர் மத்தியில் சொத்துப்பிரிவு சம்பந்தமாக உறவுகள் கெட்டுவிடலாம். அநாமதேய தொலைபேசியினால் பதகளிப்பும், அச்ச உணர்வும்
தோன்றும். விச ஐந்துகளினால் தாக்கப்படலாம். மூத்த சகோதரி வாகன யோகங்கிட்டக் கருணை காட்டுதல். சத்திரசிகிச்சை மேற்கொள்ள குழந்தைப் பேறுக்காக தமிழ்நாடு செல்லல். பொருளாதார முன்னேற்றம் பாதிக்கப்படலாம். -----------------------------------------------------------------------------------------------------------------------------

மகரம் (உத்தராடம் 2,3,4 திருவோணம், அவிட்டம் 1,2)
குருபகவான் 7இல் நின்று நீங்கி அட்டமத்து (8) 05.07.2015 தொடக்கம் ஒரு வருட காலப்பகுதிவரை நிற்கையில் தொட்டதில் துலங்குவதில் இடையூறுகள் ஏற்படும். மின்சார ஒழுக்கில் கவனம் தேவை. திருடர், எதிரியினால் பாதிப்பினை எதிர்பார்த்தல். வெற்றுக் காசோலையில் கையொப்பம் இடாதீர்கள். தலையணை மந்திரத்தால் சகோதரர் மத்தியில் பிணக்கு தக்கவைத்தல். பயணம் மோசடி
நிலையில் கொண்டுவருதல். அரசாங்க கெடுபிடி ஏற்படல். பழைய பகைமை மீண்டும் முளைவிடல். புதிய உறவுகளில் விழிப்பாக இருங்கள். புதியன கொள்வனவில் நம்பகம் அவசியம். அனுமதி பெற அலைச்சலும் வேதனையும் தக்கவைத்தல்.
கையூட்டுப் பெற்று கம்பி எண்ணும் நிலைப்பாடு, சொத்துப் பிரச்சினை
நீக்கப்படாது இழுபடல். நோயகல,மன நின்மதிக்காக தெய்வ தலங்களுக்க விஜயம் செய்தல். இயன்றவரை வெளியூர் மோகத்தை ஒத்தி வையுங்கள். குருட்டு அதிஷ்ட்டம் எதிர்பாராது ஏற்படும். பேதம் காரணமாக திருமணம் நின்றுவிடலாம். அவசரக் குடுக்கையினால் பொருட்களைத் தவறவிடுதல். பட்டகடனை வசூலிக்க
தனித்துச் செல்ல வேண்டாம். சந்தேகக் கேடு சந்தோஷக் கேட்டினை ஏற்படுத்தி கவின்கலை பாதிப்படையும். பொருட்கள் கொள்வனவிற்காக அடிக்கடி பயணம் மேற்கொள்ளல். போலியான ஏதுக்கள் கைக்கெட்டல். தேடிவரும் அதிஷ்ட்டத்தைப்
பற்றிப் பிடியுங்கள். டெங்கில் கவனம்எடுங்கள்.                                                  -----------------------------------------------------------------------------------------------------------------------------

கும்பம் (அவிட்டம் 3,4 சதயம், பூரட்டாதி 1,2,3)
பத்தில் சனீஸ்வரன் இருக்கையில் தெய்வ செயலாக வச்சிரமாமுனியை விலங்கிலே மாட்டிய 6ஆம் இடக்கோசர வியாழன் 05.07.2015 இல் நீங்கி 7ஆம் இடத்திற்கு
வருவதனால் சிலுவை இறக்கிவைக்கப்பட்டு புதியவாழ்வினைத் தொடங்கி ஏற்றம்பெறுவீர்கள். முதிர் கன்னிகள், வயது முதிர்ந்த ஆடவருக்கு திருமணபந்தம் ஏற்படும். பிள்ளைகளின் அழைப்பினால் பெற்றோருக்கு வெளியூர் யோகம் ஏற்படும். புதிய இணைப்புக்கள் பொருத்தப்படும். மழலைச் செல்வம் உருவாகும். நாடுகளின் எல்லைகளைக் கடந்து இலக்கினை அடைதல். பரிசில்கள்
பெறல். மாமனாருடன் சுமூக உறவு ஏற்படல். வாகன யோகங் கிட்டுதல். காதலில் ஏற்பட்ட பிரச்சினை விலகிவிடுதல். ஒரு கிளை நிறுவனம் திறத்தல். கூட்டுத்தொழிலில் சேர விரும்புதல். பிள்ளைகளால் யோகநிலை தக்கவைத்தல். நீதிமன்ற தீர்ப்புகள் சாதக முடிவினை தந்துவிடும். பழையதை மெருகூட்டி தலைமேல் கட்டியடிப்பார். பொருட்களைக் கொள்வனவு செய்கையில் நம்பகத்தன்மை வேண்டும். முகவரின் யுக்தியால் வெளியூர்ப்பயண இலக்கினை ஏற்படுத்தும் பரீட்சை சித்தியினால் அரசுத்தொழில், பதவி முன்னேற்றம், புலமைப்பரிசில்களும் கிட்டிவிடும். விளையாட்டில், கலைத்துறையில் பாராட்டும், பரிசில்களும் ஏற்படும். பிரமுகர்களின் சிபார்சினால் கௌரவப்பதவிகள் ஏற்படும். சூதாட்டத்தால் பணவிரயம், தண்டத்தையும் எதிர்பார்த்தல்,. மூத்த சகோதரர் மற்றும் பிதாவின் உதவியினால் வசந்தகாலம்
கைக்கெட்டும். நோய் நீங்கும். -----------------------------------------------------------------------------------------------------------------------------

மீனம் (பூரட்டாதி 4,உத்தரட்டாதி,ரேவதி )
வியாழபகவான் 05.07.2015 தொடக்கம் ஒருவருடம் வரை 6இல் நிற்கையினால் கோசர நிலையில் கெடு பலாபலன்களே ஏற்பட நேரிடினும் மீனத்தில் குரு ஆட்சி பெற்றதனால் தலைக்கு வரும் துன்பம் தலைக்கவசத்துடன் தப்பிவிடும். இயன்றவரை
மாமனாருடன் சுமூக உறவினைப் பேணுங்கள். நோயகல இயன் மருத்துவத்தைமேற்கொள்வது நன்றாகும். எதிரியைக் கண்டாலும் மௌனிப்பது துயர் விலகும். சுபகாரியம் ஏற்பட்டு நடாத்துவதற்கு கடன்படும் நிலை உண்டாகும். கொடுத்த கடனைப் பெற தனித்துச் செல்ல வேண்டாம். கன்னியர், சிறார்கள் பாலியல் துன்புறுத்தலில் எச்சரிக்கையாக இருங்கள். சட்டத்திற்கு மாறாகச்
செயற்பட்டு தண்டம் ஏற்படலாம். விலங்குகளால் பாதிப்பை எதிர்பாருங்கள். வியப்படைய வைக்கும்விநோத சம்பவங்கள் ஏற்படும். செய்தொழிலை உயிரினும் மேலாகப் பேணுதல். பயணம் சிலவேளை இடைத்தங்கல் நாட்டில் இறக்கிவிடல்.
பாதுகாப்பில் அதி உச்சக் கவனமெடுத்தல். சிறுமியர் பூப்படைதல். சுபகாரியம் நடாத்த பணத்தட்டுப்பாட்டினால் கடன்பெறல். கையூட்டுப் பெற்று கம்பி எண்ணுதல். மழலைகளுக்கு நாமம் சூட்ட பெற்றோர்களுக்கு முரண்பாடு ஏற்படல்.
பிள்ளைகளின் நடத்தைகளில் விழிப்பாக இருத்தல். எவருக்கும், எதையும் பொறுப்பை வேண்டாது கொடுக்கக் கூடாது. புதிய நட்பினை முளையிலே கிள்ளிவிடுங்கள்.

சோதிடர் V.A சிவராசா B.A B.PHIL .DIP.IN.EDU
ஜோதிர் வித்யா ரத்னா (அரச விருதுபெற்றவர்)
கந்தர்மடம், யாழ்ப்பாணம்.

   
05.02.2016 03:50   
 
Facebook Comments
Actions
Rating
0 votes
Recommend