Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
ஜோதிடம்
   
சர்வமங்களம் தரும் சனீஸ்வரனின் பெயர்ச்சிப் பலாபலன்கள் (16.12.2014 ---------2 1/2 ஆண்டுகள்) துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

Part 2 துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்மீனம்

துலாம் – சித்திரை 3ஆம் 4ஆம் பாதங்கள் சுவாதி விசாகம் 1ஆம் 2ஆம் 3ஆம் பாதங்கள்

கோசர நிலையில் சனீஸ்வரன்16.12.2014 தொடக்கம் 2 அரை ஆண்டுகள் துலா இராசியில் சஞ்சரிக்கும். இதனை வாக்குச் சனி (2ஆம் இடம்) என அழைப்பார்.

வியாழன்- 13.06.2015 வரை 10ஆம் இடம்.

இராகுஇ கேது 22.12.2015 வரை 6ஆம் 12ஆம் இடங்கள்.

சனி பார்வை 3710 ஆம் இடங்கள்

வியாழ பார்வை- 5 7 9 ஆம் இடங்கள்

இராகுஇ கேது 7ஆம் பார்வை ஏழரைச்சனி 16..6.2017இல் நீங்கும்.

ஏழரைச்சனி நடக்கும் வேளையில் குருவும் 10 இல் நிற்பதனால் எடுக்கின்ற காரியங்கள் சற்றுத் தடையும் தாமதப்பட்டுமே வெற்றியடையும். குருவின் பார்வைகள் 2இல் விழும்போது தடைப்பட்ட நிலுவைகள் வந்தடையும் 6இல் விழும்போது தீமைப்பலன்கள் குறைவடைந்தாலும் நோய் பற்றிய அச்ச நிலை அடையலாம். 4இல் விழும்போது பயணங்கள் பற்றிய சிந்தனை ஏற்படும். செய்தொழிலில் முழுக்கவனத்தையும் சர்ப்பக் கிரகங்களில் ஏழாம் பார்வையினால் பிரிவுத்துயர் வாட்டலாம். ஆபரணங்கள் கைதவறிப்போகும் நிலை பற்றி அவதானமாக இருங்கள். புதியன சேரும். இடமாற்றம் ஏற்படலாம்.

கடனில் பெறப்பட்ட வாகனம் கைப்பற்றப்படும் அபாய நிலை உண்டாகும். கிரக சாந்திகளை முன்னிட்டு தலயாத்திரை செய்ய முற்படுவர். வேலிச்சண்டையால் அயலவர் உறவு பாதிக்கப்படலாம். சட்டவிரோத மின் பாவனையால் குற்றப்பணம் கட்டுவர். அரசியல் விமர்சனத்தினால் நட்புக் கெட்டுவிடும். நித்திரையின் போது காணாக்கடி மற்றும் அமுக்குவான் பேயினால் உடல் பாதிப்பும் அச்சமும் ஏற்படும். பிரயாணத்தில் ஆவணங்கள் தவறிப்போகலாம். விவாகம் நிறைவேற தரகர்களை நாடுவதுடன் விளம்பரப்படுத்தவும் முற்படலாம்.சுவீப் அதிஷ.ட்டம் உண்டாகும்.

நீரிழிவு நோயினால் சிலர் வயோதிப நிலையை அடைவர். பொறுமை சகிப்புத்தன்மையினால் குடும்பப் பிரச்சினை எழாதுவிடும். முகங்கொடுக்கும் சம்பவங்கள் ஈகோ இன்மையினால் உங்களுக்கு வெற்றியைத்தரும். பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாந்து போக வேண்டாம்.உங்கள் புகழ் ஒரு சிலருக்கு பொறாமைத் தீயை மூட்டிவிடும். பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்ட வேளை சமயோசித புத்தியினால் விலகிவிடும். நோயின் உபாதை நீங்க தெய்வ விரதங்களை மேற்கொள்ளல் வாக்குவாதம் விதண்டாவாதத்தினால் நண்பர்களுடன் ரகளை ஏற்படும். கடனைக் கேட்ட இடத்தில் ரகளை ஏற்படும்.

உடையவன் பாராவேலை ஒரு முளம் கட்டையாவது போல் செய்யும் தொழிலை அரசுப்பணியை உங்கள் நேரடிப்பார்வையில் விட்டு வையுங்கள். ஏழரைச்சனி இருப்பதனால் தில்லுமுல்லுகள் ஏற்படக்கூடும். மொழிச்சித்தி பெற்றதனால்

வெளியூர் மணமகனைக் கரம்பிடிக்கும் யோகமுண்டாகும். பிள்ளைகளின் குறைபாடுகளை பெரிதுபடுத்த வேண்டாம். மின்னல் இடி பற்றி எச்சரிக்கையாக இருக்கவும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

விருச்சிகம் – விசாகம் 4ஆம் பாதம் அனுஷம் கேட்டை

கோசரநிலையில் சனீஸ்வரன்

16.12.2014 தொடக்கம் இரண்டரை ஆண்டுகள் விருச்சிக இராசியில் சஞ்சரிப்பார். இதனை ஜென்மச்சனி (முதலாம் இடம்) என அழைப்பார்.

வியாழன் 13 06 2015 வரை 9ஆம் இடம்.

இராகுஇ கேது 11ஆம் 5ஆம் இடங்கள்

சனி பார்வை 3 7 10 ஆம் இடங்கள்

வியாழபார்வை 5 7 9ஆம் இடங்கள்

இராகு கேது 7ஆம் பார்வை

சனீஸ்வரனின் தொல்லைகள் நீங்க திருநள்ளாறு சென்று வழிபடுங்கள்.

பாக்கியஸ்தானம் 9இல் குரு நிற்கின்றார். ஆசிரியர்கள் பெற்றோர்கள் கூறும் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கிரகித்துக் கொள்ளுங்கள்.தியானப் பயிற்சி யோகா போன்றவற்றில் ஈடுபடுவதனால் அச்ச உணர்வு ஏற்படும். முன்னேற்றத்திற்குப் பாதகமாக இருந்த இடர்பாடுகள் நீங்கும். அவப்பெயர் அகன்று விடும். பதவி கிடைக்கம் நற்செய்தி கேட்கலாம். விரோதிகளின் அட்டகாசம் மறையும். சொந்த வீட்டில் குடிபுகப்போகும் நாளை ஆர்வத்துடன் எதிர்பார்ப்பீர்கள். மாணவர் விசாகிட்டி உயர்படிப்பிற்கு வழி சமைக்கும். பிதாவின் தேக நலத்தில் கவனமெடுங்கள்.

அஷ்டமத்து வியாழன் நீங்கிய படியினால் துணிவை ஆயுதமாக்கி முன்னேற முயலுங்கள். உங்களைத் தேடி வரும் நபரினால் ஒளிமயமான எதிர்காலம் உருவாகும். ஆயுதங்களுடன் கவனமாகப் பழகுங்கள். காதலில் ஏற்பட்ட சந்தேகக் கோடு நீங்கிவிடும். பெற்றோரின் புத்திமதிகளைப் தேவ வாக்காகக் கொள்வதால்

நாடி வரும் துயர் அற்றுப்போகும். உங்களுக்குச் சொல்லப்போகும் நன்மையான செய்தி யாதெனில் கைப்பேசி மூலம் வரும் காதலை நம்பாதீர்கள்.

உங்கள் வார்த்தைப் பிரயோகம் தேளின் விடம் போல பிறரிடம் சுவறி விடலாம். நாவைக் காப்பதனால் வரவிருந்த ஆபத்து விலகிவிடலாம். ஏழரைச்சனியின் துன்ப துயரங்கள் வாட்ட முயன்றாலும் குருவின் வாக்கிய பார்வை நன்மைகளைத் தரும். பிரயாணம் விவாகமுயற்சி நிலுவைகள் நோய்கள் உறவுகள் உரிமைகள் தீர்ப்புகள் முதலியன பாதக நிலமைகளைத் தராது.இராகு 11இலும் கேது 5இலும் நிற்பதால் உறவினர் வருகை இலாபம் குழந்தைப் பாக்கியம் மாமனாரின் உதவி காதல் அயலவர் பகைமை நீங்குதல் வங்கித்தொடர்ப ஏற்படுதல், எதிரியின் அட்டகாசம் குறையும்.

குருப்பெயர்ச்சி நன்றாக இருப்பதால் கைவிடப்பட்டடிருந்த பயணத்தை மீண்டும் தொடரலாம். பிதாவின் நோய் குணமாக வைத்திய வசதியை நாடவும். கணவர் மீது சந்தகக் கோடு ஏற்பட்டதனால் மண விலக்குப் பெற நாட்டம் ஏற்படும். ஏழரைச்சனி நடைபெறுவதனால் பெருத்த முதலைப் போட்டு வர்த்தகத்தில் நட்டத்தை ஏற்படுத்த முயல வேண்டாம். திருடர் தொல்லை அகல போதிய பாதுகாப்பினைக் கருத்திற் கொள்ளுங்கள். முகம் பார்த்துக் கதைப்பதனால் நெஞ்சில் நிம்மதி பிறக்கும். வாகனப் போட்டோ போட்டியினால் விபத்து ஏற்படும் அபாயமான நிலமை பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

தனுசு – மூலம், பூராடம், உத்தராடம், 1ஆம் பாதம் கோசர நிலையில் சனீஸ்வரன்

16.12.2014 தொடக்கம் இரண்டரை ஆண்டுகள் தனுவில் சஞ்சரிப்பார். இது விரயச்சனி 12ஆம் இடம்) எனக் கூறப்படும்.

(வியாழன் – 13.06.2015 வரை அட்டமம்08ஆம் இடம்.

இராகுஇ கேது 22.12.2015 வரை 10ஆம் 4ஆம் இடங்கள்

சனி பார்வை – 3,7,10 ஆம் இடங்கள்

வியாழ பார்வை – 5,7,9ஆம் இடங்கள்

இராகுஇ கேது பார்வை 7ஆம் இடம்

16.12.2014 இல் ஏழரைச்சனி ஆரம்பம்

உங்கள் இராசியில் குரு ஆட்சி பெற்றுள்ள படியினால் அட்டம நிலை பற்றிக் கவலைப்பட வேண்டாம். சந்தேக மனப்பான்மையினால் பொருட்கள், நபர்கள் பற்றிய விழிப்புணர்வு நன்மையைக் கொடுக்கும். சனீஸ்வரன் விரய நிலையில் உள்ளதனால் மடியில் பணம் நிறையும். நோயின் உபாதை நீங்கிவிடும். விவாகத்தில் நிலவிய தடை சூரியனைக் கண்ட பனிபோல அற்றுப்போய்விடும். செய் தொழிலில் அலட்சியப் போக்கும் ஏனோ, தானோ மனப்பாங்கும் கூடாதென இராகு, கேது கோசர நிலைகள் எச்சரிகை்கை செய்யும். வாகன யோகமும், சொத்துச் சேர்க்கையும் உண்டாகும்.

இராகு, கேது முறையே 10ஆம், 4ஆம் நிலையில் இருப்பதனால் செய் தொழிலில் சிக்கல்கள் மற்றும் இடையூறுகளை எதிர்பார்த்தே ஆகவேண்டும். எங்கு செல்ல நேரிட்டாலும் நிழல்போல சனீஸ்வரனின் அருட்பார்வை பின் தொடர்ந்து நன்மைகளை ஏற்படுத்தும். பிதாவின் தேக நலத்தில் முன்னேற்றம் காணப்படும். புதியனவற்றைக் கொள்வனவு செய்வீர்கள். வெளிநாட்டிலிருந்து வேண்டிய நபர்கள் வந்து சேர்வார்கள். சுவீப் அதிஷ்டம் கிடைக்கலாம்.

நாக தோஷம், கால சர்ப்ப தோசம்உடையவர்கள் சர்ப்ப சாந்தி செய்வதனால் விவாகத்தடை நீங்கிவிடும். புதிய வாய்ப்புகள் நாடி வரும். பயண முயற்சிகள் சற்றுப் பின்னடைவைத் தந்தாலும், காரிய சித்தி ஏற்படும். புதியனவற்றைக் கொள்வனவு செய்யும்போது நம்பகத்தைப் பாருங்கள் வானிலை அவதான நிலையம் விடுக்கும் அறிவுறுத்தலை அலட்சியப்படுத்த வேண்டாம். புதிய மனை அமைக்கும் அவா ஏற்படும். அவசரத்தினால் பொருள் இழப்பு ஏற்படலாம்.

விலை கூட விற்றல், விலை கூட விற்றல் பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்தாமை, சுகாதார நலன் பேணாமை போன்ற காரணங்களால் அபராதத்திற்கு இடமுண்டு. வாகனத்திற்கு வெளிச்சம் போடாமையினால் விபத்து ஏற்படலாம். புகைவண்டிகளின் அதீத ஒலியினால் நித்திரைக்குழப்பம் ஏற்படும். கன்னியர்கள் பணம் சம்பந்தமாக மாமனாருடன் முறுகல் நிலை தோன்றிவிடலாம். கீரைக்கடைக்கும் எதிர்க்கடை தோன்றியது போல வியாபாரப் போட்டிகள் உருவாகலாம். மேலதிகாரிகளுடன் சுமூகமான உறவினைப் பேணுதல் உயர்ச்சிக்கு வழி வகுக்கும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

மகரம்- உத்தராடம் 2ஆம், 3ஆம் 4ஆம் பாதங்கள் திருவோணம், அவிட்டம்1ஆம், 2ஆம் பாதங்கள்

கோசர நிலையில் சனீஸ்வரன் 16.12.2014 தொடக்கம் 2அரை ஆண்டுகள் மகர இராசியில் சஞ்சரிப்பார். இதனை (இலாபச்சனி 11ஆம்) இடம் என அழைப்பார்.

வியாழன் 13.06.2015 வரை ஏழாம் இடம்.

இராகு, கேது 22.12.2015 வரை 9ஆம், 3ஆம் இடங்கள்.

சனி பார்வை 3ஆம், 7ஆம் 10ஆம் இடங்கள்.

வியாழபார்வை 5ஆம்,7ஆம், 9ஆம் இடங்கள்.

இராகு, கேது பார்வை 7ஆம் இடம்.

ஏழரைச்சனி 16.06.2017இல் ஆரம்பிக்கின்றது.

விதி நாதனின் ஆட்ட நாயகனாக விளங்கும் சனீஸ்வரன் ஈடுபடும் நிகழ்வுகளில் வெற்றிக்கம்பத்தை எட்டச்செய்யும். செவ்வாயின் அனுக்கிரகத்தினால் ஊதிதாக பூமிப்பிரவேசம் தக்கவைக்கும். மனை அமைக்கத் திட்டமிடுவீர்கள். விவாகப்பேச்சுவார்த்தை சாதகமுடிவினைத் தந்துவிடும். நோய் குணமடைய சிலருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படலாம். குரு மற்றும் இராகு கேதுகளின் கோசரநிலைகள் பயன்தரும் விதத்தில் உள்ளதாக. தடைப்பட்டிருக்கும் காரியங்கள் அனுகூல நிலையைத்தக்கவைக்கும்.

பழம் நளுவிப்பாலில் விழுந்த கதைபோல சனியும், குருவும் பக்கபலமாக நின்று உங்களை உயர்த்திவைப்பார்கள். அடங்கியும், அடக்கியும் வைக்கப்பட்ட நீங்கள் அதிஷ்ட தேவதையின் பாத்திரமாகி விடுவீர்கள். பிரச்சினைகள் பஞ்சு போல பறந்துவிடும். கடன்சுமை அகல நட்புவட்டங்கள் உதவ முன்வருவார். திருமணவாய்ப்பும் ஏற்படும். அரச மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்புக்களுக்கு அழைக்கப்படுவீர். புதிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடலாம். சமயோசித புத்தியினால் நேரிட வந்த விபத்தினின்றும் தப்பிவிடலாம்.

படித்துப் பாராமல் பிரதிகளில் கையெழுத்து இட வேண்டாம். சனி மற்றும் சந்திரபார்வையினால் மணவிலக்கினை எதிர்பார்த்தே ஆகவேண்டும். காசோலை மோசடிகள் கனகச்சிதமாக நிறைவேறிக்கொண்டு இருக்கும். செய்த நன்றியை மறந்து நடக்கத் தலைப்படுவார். நிலுவை அதிகரித்தால் மின்சாரம், தொலைபேசித்தொடர்புகள் துண்டிக்கப்படலாம். துணைவியின் பேச்சுக்கு புத்திமதிக்கு செவி கொடுத்தால் துயர் விலகிச்செல்லும். பதின்மவயதினரின் செய்கையால் குடும்பத்தின் கௌரவ நிலை குறையும். நம்ப நடந்தாலும்இ நம்பி ஒப்படைப்பதை கைவிடுங்கள். கைப்பேசி மூலம் ஏற்படும் காதல் காம ரச வார்த்தைகளில் சொக்கி கன்னியர் கேட்டினைத் தக்கவைப்பார். அமெரிக்க லொத்தர் கிட்டும். சுவீப்பில் பணம் அள்ளும் யோகம் உண்டாகும். மூத்தோர்கள் சொன்ன வார்த்தைகளை தேவமிர்தம் போல் கடைப்பிடித்தால் சனீஸ்வரனின் துன்பநிகழ்வுகள் தாக்கிவிடாது.

பாம்புக் கிரகங்களின் ஆதிக்கம் இருப்பதனால் உங்களை எதிர்கொள்ளும் காரியங்கள் வெற்றிக்கம்பத்தை அடைய வைக்கும். பெற்றோர்களின் கருணையால் யோகம் ஏற்படும். காதல் கனிந்து விவாகத்தை அண்மிக்கும். செய்தொழிலில் சக ஊழியர்களினால் பிரச்சினை உருவாகி பணியில் தேக்கம் நிரம்பிவிடலாம். பணமில்லாத காசோலைகள்இ முலாம் பூசிய ஆபரணங்கள், போலியான பண நோட்டு வந்தடையலாம் அவதானம் தேவை.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கும்பம்- அவிட்டம் 3ஆம் 4ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1ஆம்,2ஆம், 3ஆம் பாதங்கள்.

கும்பம்- அவிட்டம் 3ஆம் 4ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1ஆம்,2ஆம், 3ஆம் பாதங்கள்.

கோசரநிலையில் சனீஸ்வரன்.16.12.2014 தொடக்கம் இரண்டரை ஆண்டுகள் கும்ப இராசியில் சஞ்சரிப்பார். இது (கண்டகச் சனி 10ஆம் இடம் எனப்படும்)

வியாழன் 13.06.2015 வரை 8ஆம், 2ஆம் இடங்கள்.

சனி பார்வை 3ஆம், 7ஆம், 10ஆம் இடங்கள்.

வியாழ பார்வை5ஆம், 7ஆம், 9ஆம் இடங்கள்

இராகு, கேது பார்வை 7ஆம் இடம்.

கண்டகச் சனியின் துயரவெள்ளம் அகல

சனீ்ஸ்வர விரதம் வழிபாடு செய்யவும்.

வச்சிரமமா முனிவரை விலங்கிலே மாட்டிய 6ஆம் இட வியாழ கோசரம் நடைபெறுவதனால் பணிகள் பற்றிய உளத்தாக்கம் ஏற்படும். மாமன்மாரின் உறவில் விரிசலை எதிர்பாருங்கள். நிகழ்வுகளில் பங்குபற்றும் வேளை திருடனின் கைவரிசை ஏற்படலாம். தறி கெட்டுத்திரியும் பிள்ளைகளால் மனது வேதனையில் தவிக்கும். பாக்கிய சனியினால் பிதாவின் தேக சுகம் பாதிப்படையலாம். ஆவணங்களை சரி பார்த்த பின்னரே பயணத்தில் தடம் பதிக்கவும். மலை போல வருகின்ற சோதனகள் குரு பகவானின் வழிபாட்டின் மூலம். அகன்று விடும். வெளிநாட்டு உறவினருடன் முகம் பார்த்துக்கதைப்பதன் மூலம் மனம் அமைதி ஏற்படும். தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்ப்பதில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் முரண்பாடு ஏற்படும். பாதுகாப்பில் கூடிய கவனம் எடுங்கள். நோயகல தெய்வ தரிசனம் செய்ய முற்படுவீர்கள்.கால் நடைகளின் நோய் நிலையினால் கவலை ஏற்படும். மாணவர்கள் இலட்சிய நோக்குடன் கற்கைநெறிகளை மேற்கொள்ளுவர். 10இல் சனி இருப்பதனால் பிதாவின் ஆதரவு கிட்டும். குழந்தை பராமரிப்பினை முன்னிட்டு தாய்மாருக்கு வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும். பழையனவற்றைப் புதிதுபோல் காட்டி விற்பனை செய்ய முயல்வர். பெற்றோரின் நோய்கள் காரணமாக வெளியூர்ப்பயணத்தைக் கைவிட நேரிடலாம். பிழையான கணிப்பினால் பொருத்தப்பட்ட ஜாதகக் குறிப்பு மண வாழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தும். மழலைக்கு நாமகரணம் சூட்டும் விடயத்தில் பெற்றோருக்குள் முரண்பாடுகள் தோன்றும். உற்பத்திச் செலவு கூடிய பொருட்களை நட்ட விலைக்கு விற்க நேரிடுவதால் மனத்துயர் அதிகரிக்கும். நட்டம் காரணமாக வியாபாரநிலையம் மூடப்படலாம்.

தேடி வருகின்ற நபர்களுடன் சுமூகமான உறவினைப் பேணுங்கள். எதிர்பார்ப்புக்களைச் சமாளிக்க முற்படுங்கள். நிலுவைகள் கிடைப்பதற்கு தவணைகள் ஏற்படும். நோயின் பாதிப்பு குறைவடையும். பிதாவின் கருணையால் எதிர்பார்த்திருந்த பொருட்கள் கிடைக்கும். வியாழ சுகக் குறைவுகாணப்படுவதனால் பயணத்தில் விழிப்பாக இருக்கவும். வெளிநாட்டிலிருந்து எதிர்பாராது உறவினர்கள் வந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம். அவசரத்தைக் கைவிடுங்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

மீனம்- பூரட்டாதி 4ஆம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி.

கோசரநிலையில் சனீஸ்வரன்.16.12.2014 தொடக்கம் இரண்டரை ஆண்டுகள் மீன இராசியில் சஞ்சரிப்பார். இதனை பாக்கிய சனி (9ஆம் இடம்) எனக் கூறுவர்.

வியாழன் 13.06.2015 வரை 5ஆம் இடம்.இராகு, கேது 22.12.2015 வரை 7ஆம்,1ஆம் இடங்கள்.

சனி பார்வை- 3ஆம் 7ஆம் 10ஆம் இடங்கள்.

வியாழ பார்வை – 5ஆம் 7ஆம் 9ஆம் இடங்கள்.

இராகு கேது பார்வை 7ஆம் இடம்.

பாக்கியச்சனி பாரினில் ஏற்றம்பெற வைக்கும்.

சர்ப்ப கிரகங்களின் நிலைப்பாட்டினால் தொழில், பயணம் விவாகம் ஆகியவற்றை முன்னிட்டு பிரிவு ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் சிலர் கைச்சாத்திடுவர். குழந்தைப்பாக்கியம் ஏற்பட்ட சாயல் தென்படும். 9இல் சனி உள்ளதால் ஆறுதலும் நிதானமும் வெற்றியைத் தரக்கூடிய நிலை ஏற்படும். பதவியைக் காப்பாற்றிக் கொள்ள நேர்மையைக் கடைப்பிடித்தல் அவசியம். வாகன யோகம் கிட்ட பிதாவின் கருணை ஏற்படும். சொத்துப்பங்கீடு காரணமாக குடும்பத்தில் மகாபாரதப்போர் ஏற்படலாம். மங்கள நிகழ்வு கால நிலையால் பாதிப்படையலாம். பொறுப்பின்றிக் கையளித்த நகை, பணம் பெறமுடியாத நிலையில் காவல் நிலையம் சென்று முறையிடும் நிலை ஏற்படும். வெளிச்சமின்றிச் செய்யும் பயணம் ஆபத்தைக் கொண்டுவரலாம். மஞ்சள் கோட்டிலும் விபத்து நேரிடலாம். பிள்ளைகளின் நலனில் சிரத்தை எடுக்காத கணவருடன் வாக்குவாதம் ஏற்படும். பாலியல் சேஷ்டைகள் பற்றிக் கன்னியர்கள், பதின்ம வயதினர் பாதிக்கப்படுவர். கடந்த காலங்களில் ஏற்பட்ட துன்ப நிகழ்வுகள் மனதைப் பாதிக்கும்.

அவசரம், கோபம், அவநம்பிக்கை, வீண் செலவினைக் கைவிட்டு பொறுமை, நிதானம், சிக்கனத்தைக் கடைப்பிடியுங்கள். விடாமுயற்சியே உங்கள் பலமாகும். சகோதரர்களுக்கு உதவி செய்வதையும் கைவிட்டு விடுங்கள். மனம் போன வழியில் செல்ல முற்படுவதனால் துயரம் ஏற்படும். இரவில் தனித்திருப்பதனால் திருடர் பயமுண்டு. பொருட் கொள்வனவுக்காக பணம் கொண்டு செல்லாமல்

காசோலையைப் பாவியுங்கள். நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். பரீட்சை முடிவினால் பதவி, ஏற்றம், சம்பள உயர்ச்சி மற்றும் புலமைப்பரிசில் என்பனவும் கிட்டலாம். குருகோசரம் 5இல் இருப்பதனால் அரசியற் துறையினர் ஏற்றம் பெறுவர். குழந்தைப் பிராப்தி ஏற்பட்டு ஆனந்தம் தக்க வைக்கும். திருமணம் புரிய அயல்நாட்டு மணமக்கள் தாயகம் வருவார்கள். இடைத்தங்கல் நாட்டில் உறைவோர் விரும்பிய இடங்களைச் சென்றடைவர். மார்புச் சளியில் கூடிய கவனம் எடுங்கள்.

ஜோதிர் வித்யா ரத்ன அரச விருது பெற்ற ஜோதிடர் வி.ஏ சிவராசா

   
05.02.2016 03:18   
 
Facebook Comments
Actions
Rating
0 votes
Recommend