Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
ஜோதிடம்
   
காலம் பகல் 12.23 மணிக்கு மன்மதவருடம் பிறக்கின்றது. சிறப்பு வர்ணங்கள் வெள்ளை, சிவப்பு, மேடம், இடபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி.

2015-2016 மன்மதவருடம்

01.04.2015 செவ்வாய்க்கிழமை (14.04.2015) அபரபக்க தசமித்திதியும்அவிட்ட நட்சத்திரம் 2ஆம் பாதம் கடக லக்கினம், குருகாலவேரை, தாமத குண
வேளையில் குதிரை வாகனம், மயில் நடைத் தொழில் செய்யும் காலம் பகல் 12.23
மணிக்கு மன்மதவருடம் பிறக்கின்றது. சிறப்பு வர்ணங்கள் வெள்ளை, சிவப்பு,
புண்ணியகாலம் காலை 08.23 தொடக்கம் 04.03 வரை.
கைவிசேடம்
15.04.2015 புதன்கிழமை காலை 09.57 தொடக்கம் 10.15வரை பகல் 10.23 தொடக்கம்
11.58 வரை பிற்பகல் 02.10 தொடக்கம் 04.05 வரை.

               வரவு –செலவு
மேடம்     -14---------14
இடபம்-       8---------8
மிதுனம்    11---------05
கடகம் –     11--------11
சிங்கம்-       8--------14
கன்னி-       11--------05
துலாம்-       8---------8
விருச்சிகம் 14------14
தனு             2---------8
மகரம்-        5---------2
கும்பம்-       5---------2
மீனம்-         2---------8

-------------------------------------------------------------------------------------------------------------------------

தெட்சணாமூர்த்தி சுலோகம்
வியாழ பகவானால் கெடுபலாபலன்கள் நீங்கிவிட தினமும் 21 தடவைகள் சொல்ல வேண்டும்.
”ஓம் !
தெட்சணா மூர்த்தியே வித்மஹே
த்யாநஸ்த்தாயே தீமஹி
தந்தோதீச ப்ரசோதயாத்”
என்ற வாக்கியங்களை உச்சாடனம் செய்யுங்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

வியாழ வக்கிரகம்
21.12.2015 தொடக்கம் 07.02.2016 வரை வியாழபகவான் முன்னோக்கி
கன்னிராசியில் நின்று பின்னர் பழையபடி சிங்கராசிக்குச் செல்வார்.
குருவின் 5,7,9 பார்வைகள் நன்மைகளைக் கொண்டுவரும்.05.07.2015தொடக்கம் வியாழ மாற்றப் பலாபலன்கள்

மேடம் : (அச்சுவினி, பரணி, கார்த்திகை -1)                               தர்மபுத்திரரை வகவாசஞ் செய்யவைத்த வியாழன் 4இல் நின்று 05.07.2015தொடக்கம் 5ஆம் கோசரத்திற்கு பெயர்ந்து வெற்றித்திருமகனாக, அதிஸ்டசாலியாக விளங்கவைக்கப் போகின்றார்.  பயணம், விவாகம், பரீட்சை, தொழில், மாமன்மார்உறவு, குழந்தைப்பேறு, நோய் அகலல், கடன் நீங்குதல், பூமி மனைப் பிரவேசம்,வாகனயோகம், பதவிகள் கிட்டுதல், அரசுப்பிரமுகர்களின் செல்வாக்கு, மீள் நியமனம்,  சிறைக்கதவு திறத்தல், காதல் மலர்வு, காணமற்போனவர் மீண்டும்
வருதல், கௌரவத்தினை முன்னிட்டு, கூட்டுத்தொழிலைக் கைவிட்டு
தனித்தியங்கல், ஒப்பந்தங்கள்மேற்கொள்ளல், எதிரி சரணாகதியாதல், தொலைந்தவை கிடைத்தல் முதலியன மனதிற்கு ஆனந்தமளிக்கும். மக்களின் சேவை மகேசனின் சேவை என்பதைக் கைக்கொள்ள வேண்டும். பணம் எடுத்துச் செல்வதில் தகுந்த பாதுகாப்பை உறுதிப்படுத்ததுதல், வாகனப் போட்டோ போட்டி, அசாதாரண வேகத்தினால் விபத்து ஏற்படலாம். பவ்வியமான
முறையில் பிள்ளைகளின் நடத்தைக் கோலங்களைக் கண்டித்தல், வெளியூர் உறவுகள் மனை தேடி வருதல், எதிரியின் அடாவடித்தனம் மறைதல் திருட்டுப் போனது முறையீட்டினால் கிடைத்தல், புதிய கற்கை நெறியில் ஆர்வம் காட்டுதல், பரீட்சைப் பாதிப்பினால் கல்விப்புலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல், மாணவர், ஆசிரியர், உறவில் முரண்பாடு காரணமாக விசாரணைக்குள்ளாதல், மாமன்
மாருடன் ஏற்பட்டிருந்த மனத்தாங்கல் அகன்றுவிடுதல். -----------------------------------------------------------------------------------------------------------------------------

இடபம்- (கார்த்திகை 2,3,4, ரோகினி, மிருகசீரிடம் 1,2)          துரியோதனன் படையை மாளவைத்த மூன்றில் வியாழன் 5.07.2015 இல் நீங்கி 1 வருடத்திற்கு குரு 4இல் நிற்கையில் பயணம இடைத்தங்கல் நாட்டில் இறக்கி விடல் வாழ்க்கை வசதிகளில் இடையுறுகள் தக்கவைப்பு, மருத்துவச் செலவுகள்
அதிகரித்தல் காலவதியானவை கைக்கெட்டுதல் பதவிக்கு கெடு சூழல் ஒன்றை நினைக்கவே வேறொன்றாதல், பரீட்சை முடிவுகள் பாதகமாதல், விவாக முயற்சிகள் இழுபடல், விஷ ஐந்துகளின் தாக்கம், சுப காரியம் நடாத்த பணத்திற்க திண்டாட்டம் ஏற்படல் கன்னியர் உறவினால் மானபங்கமும், பொருட்சேதமும்
ஏற்படல், முதலியன கோசர வீதியில் மனதிற்க வேதனையைத் தரினும், மகாதிசாபுத்தி, நன்று எனின் நன்மைப்பலாபலன்கள் நிச்சயம் தக்கவை. மஞ்சட் கோட்டினுள்ளும் விபத்து அபாயம் உண்டு. கணக்கு வைத்ததில் அவநம்பிக்கையை தக்கவைத்தல். அரசியல் விமர்சனத்தினால் நட்பு முறிதல் கடல் மூலம் அவுஸ்ரேலியா செல்வதை மனைவி தடுத்துவிடல், கடனை அடைக்க மேலும் கடன்
பெறல், சுற்றுச் சூழலை விரும்பாமையினால் நிலத்துண்டு வாங்க பின்னடித்தல், வயோதிபத்திலும் விவாக ஆசை தோன்றுதல், பரீட்சை சித்தியினால் வெளியூர் யோகம் கிட்டுதல், பிதாவின் தேக நலன் பாதிப்படைதல், சக ஊழியர்களை அரவணைத்தால் பணியின் ரொக்கம் அற்றுப்போதல், வெளிநாடுகளிலிருந்தும்
திருமணம் புதியதாக மண்ணை மிதித்தல் சுவீப் அதிஷ்ட்டம் உண்டு. -----------------------------------------------------------------------------------------------------------------------------மிதுனம்

(மிருகசீரிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)                         பொன்னவன் குருபகவான் 2ஆம் நிலையை விட்டு (05.07.2015)இல் கோசரரீதியில் 3இல் நிற்கையில் சகோதர வழியில் தலையிடுவதைக் கைவிடுக. பொறுப்பின்றி எவருக்கும் எதையும் கொடுக்க வேண்டாம். திடீரென தேக சௌக்கியம் பாதிப்படையலாம். தைரியம், வீரியம் அற்றுப்போகலாம். புதியன கொள்வனவில்
நம்பகத்தைப் பாருங்கள். பயணமுயற்சிகள் இழுபடலாம். திருடர்கள்\ எதிரிகள் பற்றி விழிப்பாக இருங்கள். மேலதிகாரிகளின் சீற்றத்தால் உயர்வுகள் தடைப்படலாம். நட்பு, திசாபுத்தி நன்றாக இருப்பின் கண்ணுக்கு வருவது இமையுடன் தப்பிவிடும். பிள்ளைகளின் நடத்தைக்கோலங்கள் மானம், மரியாதையை இழக்கவைக்கலாம். பெரிய முதலீடுகளைத் தவிர்த்து விடுங்கள்.
ஏகாந்த நிலையைக் கைவிட்டு பிறரை அரவணைத்துக் கொள்ளல். கன்னியர், நண்பர் தொடர்பினால் நட்பு வட்டம் விரிவடைந்து காரிய ஜெயமாதல். பழைய ஒப்பந்தங்கள் காலை வாரி விட்டதால் புதியதைக் கைவிடுங்கள். போலி நகை, பணம் பற்றிக்
கவனமாக இருங்கள். நண்பர் கருணையால் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை வாய்ப்புகள் கிட்டுதல். காலம் தப்பிய மருந்துகளால் உடல் நலம் பாதிப்படைதல். கௌரவக் குறைவினால் விழாக்களைப் பகிஸ்கரித்தல். சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுதல். கர்ப்பச் சிதைவு
அரைகுறைப்பிரசவங்கள் ஏற்படல். மங்கள நிகழ்வு கொண்டாட பணத்திற்கு திண்டாடுதல். புலன்விசாரணையின் பின்னரே திருமணம் பற்றி முடிவெடுத்தல்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

கற்கடகம் (புனர்பூசம்4, பூசம். ஆயிலியம்)
தெய்வாதீனமாக ஜென்மகுரு நீங்குவது அதிஷ்டத்தின் அரவணைப்பு தேடிவரும். 05.07.2015 தொடக்கம் குரு 2இல் நிற்கையில் பொன்னும், பொருளும் குழந்தைப் பாக்கியமும் சேரப்போகின்றது. பயணங்கள் நல்ல மாதிரி நிறைவு பெறும்.
பரீட்சைச் சித்தியினால் பதவிகள், உயர்வுகள், புலமைப்பரிசில், கணவரைச் சென்றடையும் யோகம் ஏற்படும். நோய் நீங்கி வாலிபத்தன்மை மிளிரும். காதலில் வீசிய புயல் தென்றலாகும். புதியன சேரும். வெளியூர்ப்பயணம் கைக்கெட்டும்.
பெற்றோரின் நோய் அகலும். அயலவருடன் ஏற்பட்டிருந்த மனத்தாங்கல் அகன்றுவிடும். திருட்டுப்போனது கைக்கெட்டிவிடும். நீதிமன்ற முடிவுகள் சாதகமாக இருக்கும். கௌரவப் பதரவிகள் ஏற்பட பிரமுகர்கள் துணையாக விளங்குதல். சுவீப் அதிஷ்ட்டம் உண்டு. பெயர் எழுத்துக்களின் சிக்கலினால் பயணம், பரீட்சை பாதிக்கப்படலாம். சுபகாரியமன்று அமங்கலச் செய்தி கிட்டலாம். கடன் தொல்லையால் சிலர் தலைமறைவாகுதல். அசாதாரண வேகத்தைக் கட்டுப்படுத்துங்கள். விவாகமின்றி
வாடும் முதிர் கன்னிகளை நினைத்து கண்ணீர் வடித்தல். சட்டவிரோத மின் பாவனை தண்டத்தை ஏற்படுத்தல். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்தியாக இருத்தல்.
விவசாயப் பயிர்கள் நோய், ஐந்துகளால் பாதிப்படையல். இயன்றவரை காசோலைகள் வாங்குவதைத் தவிர்த்தல். இயந்திரங்களுடன் பழகமுற்படுகையில் அவதானம் தேவை,
எதிர்பாராத சம்பவம் ஒன்றினால் அச்சநிலையும், பதகளிப்பும் தக்கவைக்கும். -----------------------------------------------------------------------------------------------------------------------------

சிங்கம் (மகம், பூரம், உத்தராடம்1,2)
இராவணனின் முடி வீழ்ந்த 12இல் வியாழன் 05.07.2015 இல் நீங்கி ஜென்ம இராமர் வனத்தினிலே சீதையை சிறை வைத்த வியாழ கோசரம் ஒருவருடம் நிகழும் காலப்பகுதியில் அவசரக் கோலத்தினால் இழப்புக்களை எதிர்பாருங்கள்.
புலன்விசாரணை நன்கமைந்தால் திருமணபந்தத்திலே இறங்குங்கள். புத்திர இழப்பு, பிரிவனையை எதிர்பார்த்தல், பிள்ளைகளின் தவறுகளை பவ்வியமான முறையிலே கண்டியுங்கள். நோயும் மருந்துமாக இருத்தல். புதிய நட்பினைக் கிள்ளிவிடுங்கள். வாகன வீட்டுப் பாதுகாப்பில் அதி உச்சக் கவனமெடுங்கள்.
கடன் வசூலிக்க முறைப்பாடு செய்தல். பழையதை மெரு கூட்டி விற்க முயலுதல். திகதி தப்பியதைக் கட்டியடித்தல். வங்கித் தொடர்பு கேள்விக்குறியாதல். கருத்து வேற்றுமையால் தம்பதியரின் கவின்நிலை அற்றுப்போதல். வாஸ்த்து ஜோதிட விதியின் பிரகாரம் புதியதனை கோலல், காதலில் வீசிய புயல்
நீங்கிவிடல், சொந்த மண்ணில் நீண்டகாலத்தின் பின் கால் பதித்தல். நோய் அகல தெய்வ தரிசனங்களை நாடுதல். உரிய வேளையில் மனைக்கு வருவதால் திருட்டுப்போகாமை, மணவிலக்குப் பெற எண்ணம் மேலிடுதல்,. போதைப்பொருள் பாவனையால் சட்டத்தின் பிடியில் சிக்குதல்் பணமுடையினால் விவாகம்
தடைப்படல். பென்சனுக்குப் பின்னரும், மீள் நியமனம் பெற முயற்சித்தல், தேர்தலில் நிற்க வேண்டாமெக மனைவி தடுத்துவிடல். ஈகோ மனப்பாங்கினால் தொழிலில் குடும்பத்தில் சச்சரவு மேலோங்கல். பங்கினைக் கௌரவக்குறைவினால்
முறித்துவிடல்.

சோதிடர் V.A சிவராசா B.A B.PHIL .DIP.IN.EDU
ஜோதிர் வித்யா ரத்னா (அரச விருதுபெற்றவர்)
கந்தர்மடம், யாழ்ப்பாணம்.

பாகம் 2 கிளிக் செய்யவும்.
CLICK ON PART 2.

   
05.02.2016 03:56   
 
Facebook Comments
Actions
Rating
0 votes
Recommend