Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
ஜோதிடம்
   
சர்வமங்களம் தரும் சனீஸ்வரனின் பெயர்ச்சிப் பலாபலன்கள் (16.12.2014 ---------2 1/2 ஆண்டுகள்)மேடம், இடபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி.

Part 1 மேடம், இடபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி.

மேடம் :- அச்சுவினி,பரணி,கார்த்திகை 1ஆம்பாதம்

கோசர நிலையில் சனீஸ்வரன்:

16.12.2014 தொடக்கம் இரண்டு ஆண்டுகள் மேட இராசியில் சஞ்சரிப்பார்.

இது மேட இராசியினருக்கு அட்டமத்துச் சனி 8ஆம் இடமாகும்.

வியாழன்: 13.06.2015 வரை4ஆம் இடம்.

இராகு, கேது:22.12.2015 வரை முறையே 6ஆம், 12ஆம் இடம்.

சனி பார்வை:3.7.10 ஆம் இடங்கள்

வியாழ பார்வை: 5,7,9ஆம் இடங்கள் இராகு, கேது பார்வை 7ஆம் இடம்.

16.06.2017 அட்டமத்துச் சனி நீங்கும்.

உங்கள் இராசியில் சனீஸ்வரன் 8 இல் குருபகவான் 4 இல் இராகு, கேது முறையே 6ஆம்இ 12ஆம் இடங்களில் சஞ்சாரம் புரிகின்றனர். திடீர் பயணங்கள் ஏற்படலாம்.

தாயாரின் தேக நலம் சுகமடையும், உடையவன் பார வேலை ஒரு முழம் கட்டையாவது போல செய்தொழில் கூடிய கவனம் தேவை. ஈடுபடும் செயல்கள் நீண்ட முயற்சியின் பின்னர் வெற்றி தரும்.

தர்ம புத்திரர்களை வனவாசஞ் செல்ல வைத்த 4 ஆம் இட வியாழனினால் செயல்களில் அலைச்சல் ஏற்படலாம். செய்தொழில் போதிய கவனம் எடுங்கள். நாட்டின் எல்லைகளைக் கடக்க நேரிடும் போது தெய்வாதீனமாக பிடிபடாது தப்பி விடுவீர்கள் நிலுவைகள் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படும் பயணம் பற்றிய

முடிவெடுக்காது பிற்போடுவீர்கள். மேலதிகாரிகளின் கருணையால் வந்த இடர் அற்றுப் போகும்.

கேது பெருமான் விரயதானத்தில் இருப்பதனால் போட்ட முதல் வந்தாலே போதும் என்று இருப்பீர்கள். இராகுவின் நிலைப்பாடு எதிரிகள் தொல்லையை விரட்டிவிடும். நோய்கள் குணமடையும் அறிகுறி ஏற்படும். பயணம் தொழில் காரணமாக குடும்பப் பிரிவு தக்க வைக்கும். குரு பகவானின் 4ஆம் இடக் கோசரம் ஈடுபம் தொழில்கள் மற்றும் பணிகளில் போட்டிகளையும், சச்சரவுகளையும் கொண்டு வரலாம். புதிய மனை அமைப்பதற்கு பண வசதியை எதிர் பார்ப்பீர்கள்.

செவ்வாயின் ஆட்சி வீட்டில் பிரகஸ்பதி வியாழன் 4இல் நின்று இன்ற உங்களுக்கு வரும் இடர்களைத் தகர்த்து எறிந்து விடுவார். பயணம் இனிதே அமையும்.தயாரின் நோய் குணமடையும். பதவிகளில் இருப்போர் மேலதிகாரியுடன் இணக்கமான உறவைப் போணவும்.

சொத்துப் பிரச்சினை சுமூகமான தீர்வினைக் கொண்டு வரும். பிரயாண முயற்சிகளில் அவதானம் தேவை. மாணவர்கள் நல்ல பழக்கங்களை மேற் கொள்ளவும். திடீர் பண வரவு உண்டு.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

இடபம்:- கார்த்திகை 2ஆம், 3ஆம், 4ஆம் பாதங்கள், ரோகினி, மிருக சீரிடம் 1ஆம், ஆம் பாதங்கள்.

கோசர நிலையில் சனீஸ்வரன்:

16.12.2014 இரண்டரை வருடங்கள் இடப இராசியில் சஞ்சரி;ப்பார். இது கண்டகச் சனி 7ஆம் இடம் எனப்படும்.

வியாழன் 13.06.2015 வரை 3ஆம் இடம்.

இராகு கேது – 22.12.2015 வரை முறையே 5ஆம் 11ஆம் இடங்கள்

சனி பார்வை : 3,7,10 ஆம் இடங்கள்

வியாழ பார்வை: 5,7,9 ஆம் இடங்கள்

இராகு, கேது: 7ஆம் இடம்

குண்டகச் சனி 16.6.2017 இல் நீங்கிவிடும்.

வெள்ளியின் வீட்டில் சனீஸ்வரன் 7ஆம் நிலையில் இருப்பதனால் நீண்ட நாட்களாக மனதை வருத்திய விடயம் நல்ல முடிவினைத் தரும். காதலில் வீசிய புயல் தணியும். உறவினர் வருகையினால் கொண்டாட்டம். பதவி நிரந்தரமாகும். புதியனவற்றை ஏற்கும் போது நம்பகத்தன்மையினைப் பாருங்கள். இரவில் காணாக்கடி மற்றும் அமுக்குவான் பேயினால் துன்புறுத்தப்படுவீர்கள். சுவீப்பில் அதிஸ்டம் அரவணைக்கும். பாலியல் துன்புறுத்தல் பற்றிக் கவனம் தேவை.

இராகு, கேது நிலைகள் அதிஸ்டத்தைக் கொண்டு வரும். குழந்தைப் பாக்கியம் ஏற்பட்ட அறிகுறிகள் தோன்றும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பொருட்கள் கைக்கெட்டிவிடும். சகோதரர்களுக்கு உதவி செய்ய பின்னிற்க வேண்டாம். எதிரிகள், திருடர்களின் தொல்லைகள் விதிநாதன் சனியினால் மறைந்து விடும். புதிய மனை கட்ட, வர்த்தக முயற்சிகளில் ஈடுபட, பிறரின் உதவியால் கைவிடப்பட்ட பயணங்கள் ஏற்பட கிரகபலன்கள் சாதகமாக இருக்கின்றன. தெட்சணா மூர்த்திக்கு அர்ச்சனை வழிபாடு செய்து குரு பகவானின் தீமைகளை விலக்கிடுங்கள்.

சனி மற்றும் சந்திரனின் பார்வையினால் மண விலக்கினை எதிர்பார்த்தே ஆக வேண்டும். காசோலை மோசடிகள் கைச்சிதமாக நிறைவேறிக் கொண்டிருக்கும். செய்த நன்றியை மறந்து நடக்க தலைப்படுவர். நிலுவை அதிகரித்ததால் மின்சாரம், தொலைபேசித் தொடர்புகள் துண்டிக்கப்படலாம். மனைவியின் பேச்சுக்கும், புத்தி மதிக்கும் செவி கொடுத்தால் துயர் விலகிச் செல்லும். பதின்ம வயதினரின் செய்கையினால் குடும்பத்தினரின் கௌரவம் பாதிக்கப்படலாம். நம்ப நடந்தாலும் நம்பி ஒப்படைப்பதைக் கைவிடுங்கள். கைத்தொலைபேசி மூலம் ஏற்படும் காதல், காமரச வார்த்தைகளில் சொக்கிக் கன்னியர் கேட்டினைத் தக்கவைப்பார். ஆமெரிக்க லொத்தர் கிட்டும். சுவீப்பில் பணம் அள்ளும் யோகம் உண்டு. வியாழன் 3இல் நிற்பதால் ஈடுபடும் காரியங்களில் தவறுகள், தடைகள், குறுக்கீடுகளை எதிர்பாருங்கள். அவசரக் குடுக்கையாக இருக்காது நிதானத்தைக் கடைப்பிடித்து காரிய சித்தியைத் தக்க வையுங்கள். கர்ப்ப நாயகர்களின் 5ஆம் 11ஆம் இடக்கோசரத்தினால் தீமைகள் நிச்சயம் குறைந்து விடும்.புதிய

ஒப்பந்தங்களில் கைச்சாத்திடலாம். போட்டிகளில் புகழும், பரிசில்களும் பெறுவீர்கள். பொழுது போக்காக சிறு சுற்றுலா மேற்கொள்ள குடும்பசகிதம் சென்று வருவீர்கள்.

மிதுனம் – மிருகசீரிடம் 3ஆம் பாதம்,திருவாதிரை, புனர்பூசம், 1ஆம், 2ஆம், 3ஆம் பாதங்கள்

கோசர நிலையில் சனீஸ்வரன் – 16.12.2014 தொடக்கம் இரண்டரை ஆண்டுகள் மிதுன இராசியில் சஞ்சரிப்பர். இது சத்துரு சங்கார சனி 6ஆம் இடம் எனப்படும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

மிதுனம் – மிருகசீரிடம் 3ஆம் பாதம்,திருவாதிரை, புனர்பூசம், 1ஆம், 2ஆம், 3ஆம் பாதங்கள்

கோசர நிலையில் சனீஸ்வரன் – 16.12.2014 தொடக்கம் இரண்டரை ஆண்டுகள் மிதுன இராசியில் சஞ்சரிப்பர். இது சத்துரு சங்கார சனி 6ஆம் இடம் எனப்படும்.

வியாழன்- 13.06.2015 வரை 2ஆம் இடம்

இராகு கேது – 22.12.2015 வரை முறையே 4ஆம், 10ஆம் இடங்கள்

சனி பார்வை,3,710 ஆம் இடங்கள்

வியாழ பார்வை- 5,7,9 ஆம் இடங்கள்

இராகு கேது பார்வை – 7ஆம் இடம்

சத்துரு சனி 16.06.2017 இல் நீங்கும். இந்தச் சனி சரித்திரம் படைக்க வைக்கும்.

ஆறில் சனீஸ்வரன் வீற்றிருப்பதனால் பிள்ளைகளின் தவறுகளை பவ்வியமாகக் கண்டித்து அரவணையுங்கள். மார்புச் சளி நோயில் கூடிய கவனம் தேவை. பயணம் பற்றிய இரண்டும் கெட்டான் நிலையில் இருப்பீர்கள். செய்தொழிலில் போதிய கவனம் தேவை. தாய் மார் கற்பச்சிதைவு ஏற்படாவண்ணம் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். முகம் பார்த்ததுக் கதைத்து துயரத்தைப் புறந்தள்ளி விடுவீர்கள். பேச்சுத்திறனால் காரியங்களை வெற்றியாக்குதல். உத்தியோகப் பாணியில் உயர்வுண்டு. கன்னியரினால் சலனங்கள் உண்டு. பழையவற்றை விற்றுப் புதியவற்றைக் கொள்வனவு செய்தல், நோய் குணமடைவதால் மகிழ்வு. சமயோசிதத்தினால் விபத்துக்கள் ஏற்படாமை, தம்பதியருக்கிடையே கருத்து முரண்பாடுகள் தோன்றி மறைதல். சகுனங்களில் நம்பிக்கை வைத்து காரியம் தொடங்குதல் உதவப்போய் உபத்திரவம் ஏற்படல். அரச பாஷை தெரிந்ததனால் காரியங்களில் வெற்றி பெறல். சுவீப் அதிஷ்டம் உண்டு.

பொன்னும்,பொருளும் அள்ளிக் கொடுக்கும் குருபகவான் துணையாக இருப்பார். தடைப்பட்டிருந்த விவாகத்திற்கு பச்சைக் கொடி காட்டப்படும். அவசரபுத்தியும், அடங்கா முன்கோபமும் அன்பின் பலனைக் கெடுத்துவிடும். கைப்பேசிதொலையும், அபாய நிலை உண்டாகும், சளி நோயில் கவனம் எடுங்கள். ஏதிலிகள், ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். தாயாரின் நோய்மாறும் அறிகுறிகள் ஏற்பட்டு மகிழ்வைத்தரும்.

தொழிலில் போதியகவனம் காட்டாவிடின் நட்டமே தக்கவைக்கும். பொருத்தமில்லாத திருமணத்தைப் பொருத்தித் தரும்படி சோதிடரைக் கோருவர். பயணமுயற்சியைத் தொடர மனம் பின்னடையும். போட்டிகளில் பாராட்டும், பரிசில்களும் கிட்டிவிடும். விளம்பரத்தை நம்பி மோசடி நிலைக்கு சிலர் தள்ளப்படுவார்.

தடைகள் விலக நவக்கிரக அர்ச்சனை செய்ய விரும்புதல். குழந்தைப் பாக்கியம் ஏற்பட அறிகுறி தென்படல். காதலில் நிலவிய சந்தேகக் கோடு மறைந்துவிடல். போட்டியினால் பரிசில்இ புகழ் பெறல். நோயின் தாண்டவம் தொடர்தல், பாதுகாப்பில் கவனம் செலுத்தியதால் திருட்டுப் போகாமை. மாமன்மாருடன் முறுகல் ஏற்படும். பின் சமரச நிலைக்கு வருதல். எதிரியின் அச்சுறுத்தல் அகன்றுவிடல்.பொறுப்பின்றிக் கொடுத்த பணத்தைப் பெற காவல் துறையை நாடுதல். மின் ஒழுக்கில் கவனம் எடுத்தபடியால் வரவிருந்த ஆபத்துவிலகிவிடும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கடகம் - புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயிலியம் கோசர நிலையில்

சனீஸ்வரன் 16.12.2014 தொடக்கம் இரண்டரை ஆண்டுகள் கர்க்கடக இராசியில் சஞ்சரிப்பார். இதனை ஐந்தில் சனி,எனவும் நஞ்சுச் சனி எனவும் அழைப்பர்.

வியாழன் – 13.06.2015 வரை 1ஆம் இடம். இராகு கேது, 22.12.2015 வரை முறையே 3ஆம், 9ஆம் இடங்கள்

சனி பார்வை 3,7,10ஆம் இடங்கள்

வியாழபார்வை – 5,7,9 ஆம் இடங்கள் இராகு, கேது பார்வை – 7ஆம் இடம்.

16.06.2017 இல் சனி நீங்கிவிடும்.

சனீஸ்வரன் 5இல் நிற்பதனால் தாயாரின் தேக நலத்தில் கவனம் எடுங்கள் அரச பணிபுரிவோர் மேலதிகாரிகளுடன் ஒத்துப்போகவும். புதிதாகமனை அமைக்க நிலத்தை தெரிவுசெய்ய முற்பட வேண்டாம். புதியனவற்றைக் கொள்வனவு செய்ய நேரிடும். அந்த வேளை, நம்பகத்தன்மையைப் பாருங்கள். சகோதரர்களின் விடயத்தில் தலையிடுவதை கைவிட்டால் துயர் ஏற்படாது.

காதலில் வீசிய புயல் ஓய்ந்துவிடும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிப்பில் கவனஞ்செலுத்துங்கள். வங்கியில் கருணையால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். விபத்திலிருந்து மயிரிழையில் தப்பிவிடுவீர்கள். பயணங்கள் கேள்விக்குறியாகும். ஆவணங்கள் பெறுவதற்கு பிரயத்தனம் செய்தல் வேண்டும். கால்நடை வளர்ப்பில் கவனமெடுத்தல் வேண்டும். கௌரவிப்பதவிகள் கிடைக்கும் செய்திகள் வரும்.

தொழிலில் நெருக்கடிகள், தடைகள் தாமதங்களை சந்தித்தல் வேண்டும். மேலதிக பொறுப்புக்களை ஏற்றதால் திண்டாடுதல்,பண வரவுகள் கிட்டுவதால் உடனுக்குடன் பணப்பிரச்சினைகள் தீர வழி ஏற்படும்.

சர்ப்ப கிரகங்களான இராகு, கேது முறையே 3ஆம், 9ஆம் கோசர நிலையில் உள்ளதால் சகோதரர்கள் மற்றும் பிதாவின் ஆதரவு கிட்டி வசந்தம் பிறக்கும். வாகன யோகம் ஏற்படும். புதிய முயற்சிகள் தொடங்க மனதில் எண்ணம் உதயமாகும். தாயாரின் நோய் சற்றுக்கவலை தரும். பயண முகவர்களைச் சந்திக்க பிரயாணம் மேற்கொள்வார். வியாபார நிலையங்கள் மற்றும் அரசுப் பணி ஊழியர்களுடன் சமூகமான உறவினைப் பேணுங்கள்.

பாக்கியாதிபதி குருவின் ஜென்ம நிலையினால் 5ஆம், 7ஆம், 9ஆம் பார்வைப் பலத்தினாலும், களத்திரத்தினால் நன்மைகளும், இன்ப சுகமும் உண்டாகும்.விவாக சுபச்செய்தி கிட்டும். நண்பர்களின் உதவிக்கரம் நீண்டுவிடும். பள்ளத்தில் விழுந்தவர் பல்லக்கில் ஏறலாம். சோதனைகள் அகன்றுவிடும். தெய்வ தலங்களுக்கு விஜயம் செய்தல். புத்திரபாக்கியம் கிட்டுவதும்ஏற்பட்டதற்கான அறிகுறியும் மனதை ஆனந்தப்பரவமாக்கும். சிறு பிரச்சினைகள் ஏற்படினும் அது மனதை வாட்டாது. புத்திமதிகளைக் கேட்டு நடப்பதனால் துயர் விலகிப்போகும். சுவீப் அதிஷ்டம் உண்டு.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

சிம்மம் – மகம் பூரம் உத்தரம் 1ஆம் பாதம்.

கோசரநிலையில் சனீஸ்வரன்16.12.2014 தொடக்கம் இரண்டரை ஆண்டுகள் சிம்ம இராசியில் சஞ்சரிக்கும். இதனை அர்த்தாஷ்டம சனி( 4ஆம் இடம்) எனக் கூறுவர்.

வியாழன் 13.06.2015 வரை 12ஆம் இடம்.

இராகு கேது 22.12.2015 வரைமுறையே 2ஆம்8ஆம் இடங்கள்

சனி பார்வை 3 7 10 ஆம் இடங்கள் வியாழ பார்வை 5 7 9ஆம் இடங்கள்

இராகு கேது – 7ஆம் இடம். அர்த்தாஷ்டம சனியின் தொல்லைகள் 16.06.2017 இல் நீங்கும்.

ஊன பாதன் சனீஸ்வரன் தொட்டதைத் துலங்கவைப்பான். சுபச் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளிக்கக் கூடிய நிலையில் இருப்பீர்கள். சில நாட்களாக நிலவிக்கொண்டிருந்த கருத்து முரண்பாடுகள் நீங்கிவிடும். சம கால அரசியல் பற்றி பேச முற்படுவது நட்புக் கெடுதலை ஏற்படுத்தும். மஞ்சட் கோட்டினைக் கடக்க முற்படுகையிலும் விபத்து நேரிடலாம். பிதாவின் தேக நலம் முன்னேற்றம் அடையும். வெளியீடுகளில் ஆர்வமிருக்கும்.

தத்துப் புத்திர யோகம் முதுமைக்காலத்திலும் திருமுண பந்தம் முறை தவறிய காதல் இரண்டாம் தாரம் முதலியன ஏற்படலாம். பேஸ்புக் மூலம் கௌரவக் குறைபாடு மான பங்கமும் ஏற்படும். அடாவடித்தனம் அகல முறைப்பாடு செய்ய முயல்வர். பிள்ளைகள் விடுகின்ற தவறினை அவர்கள் மனம் நோகா வண்ணம் பவ்வியமாகக் கண்டிக்கவும். பழைய மனையை அழித்து புது மனை கட்ட நாள் கோள் நட்சத்திரம் பார்ப்பார். வாகனப்போட்ட போட்டியில் விபத்துக்கள் ஏற்படலாம். வங்கிக்கணக்கு காணி உறுதியிலும் மோசடியினை எதிர்பார்க்கவும்.

கடந்த ஆண்டில் ஏற்பட்ட பிரச்சினைகள் சூரியனைக் கண்ட பனி போல விலகிவிடும். புதிய முயற்சிகள் முன்னேற்றத்தையும் இலாபத்தினையும் கொண்டுவரும். சமூகத்தில் கௌரவமான நிலைக்கு உயரலாம். உற்றார் உறவினர்களின் உதவிகளும் ஆதரவும் அமையும். புத்திரர்களால் பணவரவு கிட்டிமனை வாகனம் என்பவற்றினைக் கொள்வனவு செய்வீர்கள். நோய் குணமடைந்து தேகபலமடையும் ருதுவாதல் விவாகம் கைகூடல் மற்றும்

பபயணமுயற்சிகள் நிறைவேறும். மேலதிகாரிகள் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். தொழில் முன்னேற்றமடைய புதிய வாய்ப்புக்கள் தேடி வரும்.

சுப காரியச் செலவுகள் வியாழகோசரத்தினால் ஏற்படும் நிலை உண்டாகும். பகைவர்இ திருடர் பற்றிய விழிப்புணர்வைக் கைவிடாதீர்கள். நோய் நீங்க தெய்வத்தலங்களை நாட முற்படுவீர்கள். சனீஸ்வரன் துணைபுரியும் ஸ்தானத்தில் உள்ளதால் செய்யும் தொழிலில் நிம்மதியும் இலாபமும் ஏற்படும். பொறுப்பைக் கோராமல் பணத்தைக் கொடுக்க வேண்டாம். காசோலை பணமின்றித் திரும்புவதால் காசோலை கொடுத்தவருடன் சச்சரவு வாக்குவாதம் ஏற்படும். அவசரபுத்தியைக் கைவிட்டு நிதானத்துடன் செயற்படுங்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கன்னி – அத்தம் சித்திரை 1ஆம் 2ஆம் உத்தரம் 2ஆம் 3ஆம் 4ஆம் பாதங்கள்.

கோசர நிலையில் சனீஸ்வரன் 16.12.2014 தொடக்கம் 2 அரை ஆண்டுகள் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். இதனை தைரிய வீரியச் சனி (3ஆம் இடம்) எனக் கூறுவர்.

வியாழன் 13.06.2015 வரை 11ஆம் இடம்

இராகு கேது 22.12.2015 வரை முறையே 1ஆம் 7ஆம் இடங்கள்

சனிப்பார்வை3ஆம் 7ஆம் 10ஆம் இடங்கள்

வியாழ பார்வை 5ஆம் 7ஆம் 8ஆம் இடங்கள்

இராகு கேது 7ஆம் பார்வை

ஏழரைச்சனி – 16.12.2014 இல் முடிவடையும்.

ஏழரைச்சனி நீங்குவதனால் ஈடுபடும் செயல்கள் வெற்றியின் நாயகனாக ஆக்கிவிடும். கன்னி இராசியில் குரு நட்பு பெற்றிருக்கின்ற படியால் வருகின்ற சோதனைகள் ஈற்றில் சாதனையைப் படைத்துவிடும். கைவிடப்பட்டிருந்த வெளியூர்ப்பயணம் நிறைவுபெறும். கல்விப்புலத்தில் சாதனை படைப்பீர்கள். விவசாயம் சிறந்து விளங்கும். பரீட்சைகளில் சித்தியடைந்து உத்தியோகத்திலும் உயர்கல்விக்கும் வழி ஏற்படும். புதிய கற்கை நெறிகள் பயில ஆர்வம் பிறக்கும்.

குருவில் 11ஆம் கோசர நிலையினால் தொடுத்த காரியங்கள் மனதிற்கு திருப்தி தரும் வகையில் இனிய முடிவினைக் கொண்டு வரும். இராகு கேது நிலையினால் பயணத்தை முன்னிட்டு பிரிவுத்துயரம் ஏற்படலாம். கடனில் பெறப்பட்ட வாகனம் பறி போய்விடலாம் என்ற அச்ச உயர்வு தக்கவைக்கும். மொழிச்சித்தியினால் துணைவரைச் சென்றடையும் யோகம் அண்மிக்கும். பொறுப்பைக் கோராமல் எவருக்கும் பணம் நகைகளைக் கொடுக்க வேண்டாம்.

மனையாள் தடுத்த போதிலும் இரக்கத்தினால் கொடுத்த பொருளைப் பெறமுடியாது திண்டாட்டம் ஏற்படும். வியாபாரப் போட்டியினால் அயல் நிலையங்களுடன் மனத்தாக்கம் ஏற்படும். வசியம் பில்லி சூனியத்தினால் எதிரிகள் உங்கள் முன்னேற்றத்தைத் தடுத்துவிடலாம். பயணமுகவரின் சாமர்த்தியத்தினால் உங்கள் வெளியூர்ப்பயணங்கள் வெற்றியை ஏற்படுத்தும். வீசா கிட்டும். வேற்று நாட்டுப் பெண்களை விவாகம் செய்ய முனைவீர்கள். மருத்துவரின் திறமையினால் உயிராபத்தினின்றும் தப்பிப் பிழைப்பீர்கள். பெற்றோர் நினைவாக தான தருமம் செய்தல் என்பன நடைபெறும்.

வியாழன் நலமான இடத்தில் நிற்பதால் எதிர்பார்த்த நன்மைகள் கேட்ட உதவிகள் வந்து சேரும். மனக்கிலேசம் அகன்றுவிடும். பரீட்சை சித்தியினால் அரசுத்துறையில் வேலை வாய்ப்புக் கிட்டும். பிரயாணம் இலக்கினை எட்ட வைக்கும். சகபாடிகளின் உறவினைக்கை விட்டு மாணவர்கள் கல்விப்புலத்தில் மனதைச் செலுத்த முற்படுவர். இறை நம்பிக்கையினால் வருத்திய துயர் மறைந்துவிடும். விபத்துக்கள் ஏற்படாது தப்பிவிடுவீர்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஜோதிர் வித்யா ரத்ன அரச விருது பெற்ற ஜோதிடர் வி.ஏ சிவராசா

   
05.02.2016 03:48   
 
Facebook Comments
Actions
Rating
0 votes
Recommend