Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description

Padmavathi

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் நடித்துள்ள படம் பத்மாவதி. சர்ச்சை காரணமாக இந்த படம்  பத்மாவத் என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது.கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இந்தியா  முழுவதும் பத்மாவத் திரைப்படம் ரிலீஸ் ஆனது. ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், பீகார் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் இந்த படம் நேற்று வெளியாகவில்லை. இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ள சர்ச்சை காரணமாக பலர் இதை பார்க்கும் ஆவலில் உள்ளார்கள்.

 Pamavathi

சிங்கள தேசத்தில் முத்துகளைப் பெறுவதற்காகச் செல்கிறார் சித்தோடு அரசர் ராவல் ரத்தன் சிங் (ஷாகித் கபூர்). அப்போது காட்டில் இளவரசி பத்மாவதி (தீபிகா படுகோன்) மானைக் குறி வைத்து செலுத்தும் அம்பு, ரத்தன் சிங் மார்பைத் துளைக்கிறது. இதனால் காயப்பட்ட ரத்தன் சிங்குக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து, அவரை குணமடையச் செய்கிறார். இதனிடையே இருவருக்கும் காதல் மலர, திருமணம் புரிந்து பத்மாவதியை சித்தோடுக்கு அழைத்து வருகிறார் ரத்தன் சிங். பத்மாவதியின் அழகில் மயங்கும் ராஜகுரு, ரத்தன் சிங்- பத்மாவதி தனித்து இருக்கும் போது ஒளிந்திருந்து பார்க்கிறார். இதனால் பத்மாவதியின் கூற்றுப்படி, ரத்தன் சிங் உத்தரவால் ராஜகுரு நாடு கடத்தப்படுகிறார்.

டெல்லியை வந்தடையும் ராஜகுரு, அரசன் அலாவுதீன் கில்ஜியை (ரன்வீர் சிங்) சந்தித்து பத்மாவதியின் பேரழைக் கூறி மதி மயங்கச் செய்கிறார். கண்ணால் பார்த்திராத பத்மாவதிக்காக அலாவுதின் கில்ஜி டெல்லியில் இருந்து சித்தோடு நோக்கி படையெடுக்கிறார். சமாதானப் பேச்சுவார்த்தை என்று சொல்லி வஞ்சகமாக ரத்தன் சிங்கை சிறைபிடிக்கிறார். ரத்தன் சிங் விடுவிக்கப்பட வேண்டுமானால் பத்மாவதி டெல்லி வந்தாக வேண்டும் என்று கில்ஜி சொல்ல, பத்மாவதி என்ன செய்கிறார், ரத்தன் சிங் விடுவிக்கப்பட்டாரா என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது பத்மாவத்.

Photos
Comments
Order by: 
Per page:
 
  • There are no comments yet
Rate
0 votes
Likes
Empty
Recommend