Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description

'விவேகம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்துக்கு 'விசுவாசம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

'பில்லா', 'ஏகன்', 'ஆரம்பம்' ஆகிய படங்களுக்குப் பிறகு 'விசுவாசம்' படத்தின் மூலம் நான்காவது முறையாக அஜித்துடன் நயன்தாரா இணைந்து நடிக்கிறார்

'விசுவாசம்' படத்திற்காக இயக்குநர் சிவா - யுவன் இருவருமே பாடல்கள் உருவாக்கப் பணியில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் சில சிக்கல்களால் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகினார். இதனால் இப்படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்ற கேள்வி நிலவி வந்தது. மீண்டும் அனிருத்தான் என்று தகவல்கள் வெளியானாலும், படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 100 படங்களுக்கு மேல் இசையமைத்திருந்தாலும் அஜித் படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதல் முறை. படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது. 2018 தீபாவளிக்கு 'விசுவாசம்' வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Photos
Comments
Order by: 
Per page:
 
  • There are no comments yet
Rate
0 votes
Likes
Empty
Recommend