Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description
25 ஆண்டுகள் தொடர்ந்து கொண்டிருக்கும் 7 பேரின் விடுதலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் நம்பிக்கையில் உலகத் தமிழன் திடமாகக் காத்திருக்கும் இவ்வேளையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள மத்தியில் சர்ச்சரவுகளும் தாறுமாறான குளறுபடிக் குளப்படிகளும் வேதனையையும் வெறுப்பையும் தருகின்றது.

அரசியல் கட்சித்தலைவர்கள் உதட்டில் வருவது ஒன்று. உள்ளத்தில் உறங்குவது வேறொன்றாகப் பேசியும் கபடநாடகமாடி ஏமாற்றும் வெட்கத்துக்கு உள்ளாகின்றார்கள்.

ராஜீவ் காந்தி கொலைத் தண்டனையிலிருந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா ஜெயலலிதா ஆட்சியின் செயலாளர் எழுதிய மடல் விடுதலை கிடைப்பதற்கான மாலையாக விழுந்துள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர்.

உலகத்தமிழன் 7 பேரும் வெளிவரும் நாளை மகிழ்வோடு எதிர்பார்த்திருக்கின்றானர்.

தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களுக்குள் நடக்கும் திருகுதாளங்கள் சோடிப்பு வித்தைகள் சர்ச்சரவுகளும் விமர்சனச் செய்திகளும் மிதமிஞ்சிய கவலைகளை கேவலமாகக் குவித்து திணறடிக்கிறது.

அரசியல் கட்சித் தலைவர்கள் 7 பேரின் விடுதலைக்கு முன்னர் முன்னின்று வக்காலத்து வாங்கியவர்கள்தானே ஏன்தான் இன்று இப்படியாக நடந்துகொள்கின்றனர்?

25.ஆண்டுகள் நிரபராதிகள் அனுபவித்த தண்டனைக் காலம் விலைமதிப்பற்றன. ராஜீவ் காந்தியின் உயிரைப் பறித்தவர்கள் இவர்களில்லை!

குற்றமே இல்லாத இவர்கள் 25 வருடங்கள் சிறையில் அடைபட்டுக் கிடந்தவர்கள். விடுதலை பெறுவதற்கான அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.

இதை யார் செய்தால் என்ன? அம்மா செய்தால் என்ன- ஐயா ஊட்டினால் என்ன. சந்தர்ப்பவாதம் என்று சொல்லும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் எதைச் சாக்காகவைத்து இந்தப் பித்தலாட்டமான பிடி வாதம் பிடிக்கின்றார்கள்?

கேடுகெட்ட முட்டாள்கள் இவர்களால்தான் நீண்டு நீண்ட காலம். இழுத்துக் கொண்டு போனது. இன்று விடுதலை பெற்றிட இத்தேர்தல்களம் சாதகமாக நிற்கும் தருணம்.

இந்தத் தேர்தல் வேளையில்தான் இக்காரியத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றுவிட்டால் இதைவைத்து வாக்குகள் அதிகம் பெற்று அண்ணா தி.மு.க ஆட்சி அமைந்துவிடும் என்ற பதகளிப்பில்தான் தமிழ் நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தப்பான சர்ச்சைக்குரிய செய்திகளை எழுப்பிக்கொள்கின்றனர்.

தமிழ் இனத்தை அழித்த “விஷம் கலந்த கனி கலைஞர் கருணாநிதிக்கு இப்படியான நரித்தந்திரம் கைவந்த கலை.” முன்னர் 7.பேரின் விடுதலைக்காக குரல் கொடுத்த அறிவுள்ள அரசியல் கோமாளிகளிடம் ஏனிந்த முட்டாள்தனம்?

“யார் குத்தியும் அரிசி மாவானால்” போதும். பல்வேறுபட்ட சர்ச்சைகளை விட்டுவிடுங்கள் 7 பேரும் விடுதலைபெற்று வெளிவர ஒரே குரலில் ஓங்காரமாய்க் குரல் கொடுத்தல் வெற்றி கிடைக்கும்..

முதுகெலும்பற்றவர்களாய் பல்வேறுபட்ட வெறுப்பான விமர்சனங்களை வீசி தடைபோடாமல் நிரபராதிகள் எமது உடன்பிறப்புகள் 7.பேரும் விடுதலை பெறவேண்டும்.

அந்த ஆன்மாக்கள் அனுபவித்த துன்பம் துயரம் வேதனைகள் போதும். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைமைத் தமிழழினத் தலைவர்களைத் தயவுடன் கேட்கின்றேன்…

”காகிதப் பூ விற்குள் மறைந்திருக்கும் காட்டுவிரியன் நஞ்சைக் கக்குவதுபோல் கருணாநிதியின் குணத்தைக் காட்டாதீர்கள்!

“7பேரும் அக்கினிமேல் நிறுத்தப்பட்ட மெழுகுப் பொம்மைகள் போலானார்கள்”.

அந்தத் தியாகிகள் விடுதலையடைய நீங்கள் மனிதனாய் மானிட நேயனாய் ஒன்றாய்க் குரல் கொடுங்கள். அலகையின் பழிவாங்கள் வேண்டாம்! கொள்ளிவாய்ப் பிசாசுகளின் பேய்க்குரலைக் கைவிட்டுவிடுங்கள் :அது கருணாநிதிக்கும்--காங்கிரசுக்கும் சொந்தமானது.

“குற்றவாளிகளுக்கும்-அரசியல்வாதிகளுக்கும் அதிக வேறுபாடு அதிகமில்லை. குற்றவாளிகள் குற்றத் தீர்ப்புப் பெற்று சிறைக்குப் போகின்றார்கள். அரசியல் வாதிகள் குற்றங்கள் செய்யத் தூண்டிக்கொண்டு வெளியில் (நாற்காலியில்) இருக்கின்றார்கள்”

7 பேரும் விடுதலை அடைய வேண்டும். ராஜீவ் காந்தியின் குடும்பத்தினருக்குப் பிறந்திருக்கும் இரக்கம் கூடவா உங்கள் தொப்பிள்கொடி உறவுகள் மீது தமிழ் நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வரவில்லை?

விடுதலை யார் தலையீட்டில் கிடைத்தாலும் கிடைக் கட்டும் வரவேற்க வேண்டிய நீங்கள் ஏன் தடையாகத் தப்பான வார்த்தைகளைப் பிரயோகித்து சர்ச்சரவுகளைச் சார்ந்து இடைத்தகராறுகளோடு நிற்கின்றீர்கள்.

கூட்டணி என்று கூறிக்கொண்டு கூட்டுச்சேராது கூறுபோட்டு விலைபேசி இனத்தையே விற்றுப் பிழைப்புத் தேடும் அலங்கோலத்தை விதைத்து முடைநாற்றம் வீசும் அரசியல் தேர்தல் களத்திற்குள் வேசமாடி நாளை கோட்டைக்குள் நுழைந்ததும் நாசமாக்கி விடுவீர்கள்.

16.மே.2016 தேர்தல் வாக்கு வேட்டைக்குள் 7 பேர் விடுதலையைக் கொண்டு செல்லாதீர்கள். சிறைவாழ்வு 25ஆண்டுகள் வாழ்வைச் சின்னபின்ன மாக்கிவிட்டன.

குடும்பத்தவர் வாழ்வைத் துன்பக்கடலில் ஆழ்த்தி மானிடநேயத்திற்குச் சவாலாக்கி மகத்தான தண்டனை யை அனுபவித்துவிட்டனர்:

பெற்றவர்கள் பிள்ளைகள் கண்ணீரும் கதறலும். நெஞ்சைத்தை இரண்டாகப் பிளக்கின்றது. தன் மகன் வருவான் ஒரே ஒருமுறையாவது தன்மகனைக் காணத் துடிக்கிறாள். ஒரு கண்ணையிழந்து 25.வருடங்களாகப் பார்க்காத தாய் தில்லையம்பலம் மகேஸ்வரி.

முதல்வர் அம்மா ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்துவிட்டு “தான் உயிரோடு இருக்கும் போது என் மகனைப் ஒரு கண்ணாலாவது பார்த்துவிட்டுச் சாவேன்” என ஓலமிடும் தாய் தமிழீழத்தில் காத்திருக்கும் கோலம் முள்ளிவாய்க்கால் காலத்தை கண்முன்காட்டும் அவலக் காட்சியாகப் பிரதிபலிக்கின்றது.

தந்தையைப் பார்த்துப் பதறும். பிள்ளைகள் மனிதர்களே தமிழ் நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களே. இத்தேர்தல் காலம்தான் விடுதலை கிடைக்கும் தருணம் இக்காரியத்தை அம்மா செய்தால் என்ன? ஐயா செய்தால் என்ன?

யார் முன்னின்று செய்தாலும் அவர்கள் பெயர் எடுக்கட்டும் விட்டுவிடுங்கள்.

7பேரும் விடுதலை பெறவேண்டும் இன்றே உங்களது கபடநாடக வேடம் ஆடுதலை நிறுத்தினாhல் 7பேரும் விடுதலை பெற்று வெளியில் வருவார்கள்..

ஒரே குரலில் தட்டுங்கள் திறக்கப்படும்- கேளுங்கள் கொடுக்கப்படும்..

கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன்

Location
Facebook Comments
Rate
0 votes
Likes
Empty
Recommend