Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Descriptionதற்போது, அரசாங்கத்தினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட 2 கோடி ரூபா வியடம் அதிகமாக பேசப்படுகின்றது. ஆனால் இந்த விடயம் தொடர்பாக பல மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் கூட்டமைப்பின் பாராயமன்ற உறுப்பினர்களும் முன்னுக்குப்பின்       முரணான கருத்துக்களையே தெரிவித்த வருகின்றனர். தேசிய கொள்கை மற்றும் திட்டமிடல் ஊடாக பிரதமரினால் அந்த நிதி வழங்கப்பட்டது. அபிவிருத்திக்காக அந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே 2 கோடி ரூபா நிதி கொடுக்கப்பட்டது. பொது எதிரணியில் உள்ள 50 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படவில்லை. மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி) கொடுக்கவில்லை. ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 16 பாராளுமன்ற உறுப்பினர்களில் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 2 கோடி ரூபா கொடுக்கப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சொல்கின்றார்கள். அவ்வாறாயின், தாமும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றோம் என்பதனை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒத்துக்கொள்கின்றார்களா என  கேள்வி எழுப்பியுள்ளது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு, எதிர்க்கட்சியில் இருந்து மக்களின் உரிமைக்காக போராடச் சொல்லி மக்கள் ஆணை கொடுத்துள்ளார்கள். ஆனால், அரசாங்கத்துடன் இருந்துகொண்டு, இங்குள்ள மக்களுக்கு இன்னொரு முகத்தை காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றோம் என்பதனை ஒத்துக்கொள்கின்றார்கள். கடைசியாக உரிமையும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை. வீணான பேச்சுக்களைக் காட்டி, உசுப்பேத்தி அரசியல் செய்ய முடியாது என்பது மக்கள் மத்தியில் செல்லும் போது தெட்டத் தெளிவாக தெரிகின்றது. இதேநேரம், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பாடம் புகட்ட மக்கள் தீர்மானித்துள்ளார்கள். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் உரிமையையும் கொண்டு வரவில்லை. அபிவிருத்தியையும் கொண்டு வரவில்லை. அபிவிருத்தி எமது அடிப்படை உரிமை என்பதனை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மறந்துவிட்டார்கள்.யாருக்குமே தனிப் பெரும்பான்மை வரமுடியாத காலகட்டம் உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் அளிக்கும் வாக்கு ஒரே வாக்குதான். இவ்வாறு தனது மனக்குமுறலை அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வெளிப்படுத்தியிருந்தார். 

ஆக, ”மழையைக் கண்டதும் முளைக்கும் காளான்கள் போல்” உள்ளுராட்சி தேர்தல் நடக்க இருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டு, அல்லது தம்மையும் தமக்கு சலாம் போடுபவர்களையும் நல்வர்களாக்குவதற்காகவே இந்த விவகாரம் தற்போது தலைவிரித்தாடுவதாக மக்கள் தங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளோ அல்லது மக்களின் பிரச்சினைகளோ , அல்லது நாட்டின் அபிவிருத்தியோ எமது நோக்கமல்ல, கடந்த காலங்களைப்போலவே எங்கள் வாக்கு வங்கிகள் நிறைய வேண்டும் என்பதே தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் நோக்கம் என்பது தமக்கு  நன்றாக விளங்கியுள்ளதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு வெல்லக்கூடிய ஆசனங்களைப் பெறாவிடின், ஐக்கிய தேசிய கட்சி, ஆதரவு கொடுத்து ஆட்சி அமைக்க நினைக்கும். நாம் பாடம் புகட்ட வேண்டுமாயின், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்காமல் விடுவதைப் போன்று, ஐக்கிய தேசிய கட்சிக்கும் வாக்களிக்க சிந்திக்க வேண்டும். 
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் தமிழ் மக்கள் பேரவை உள்ளிட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் ஏனைய கட்சிகளிடம் வேண்டுகோள் விடுகின்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான அணியை உருவாக்க வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்தால், உள்ளூராட்சி சபையின் ஆட்சியைக் கைப்பற்ற முடியும். அவ்வாறு கைப்பற்றும் போது, ஜனாதிபதியுடன் பேசி தேவையான நிதிகளைக் என்னால் கொண்டு வர முடியும். கிராமங்களை பொருளாதார ரீதியாக முன்னேற்ற முடியும். தேர்தல் நிறைவடைவதற்குள் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளையும் தம்முடன் கைகோர்க்குமாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள அங்கஜன், தேர்தலுக்காக இரண்டு துவிச்சக்கரவண்டிகளையும், கணவனை இழந்த பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பத்தில் வாழும் பிள்ளைகளுககு 10 கொப்பிகளையும் அண்யைில் வாக்குப்பெறுவதற்காக உதவி என்ற பெயரில்  செய்தார் எனக் குறிப்பிட்டுள்ள பிரதேச வாசி ஒருவர் அங்கயன் இவ்வளவு காலமும் இலண்டனிலா வசித்தார் எனக் கேள்வி எழுப்பியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

 

நன்றி

கட்டுரை ஜெயந்தி  கண்ணன்

மக்களின் கருத்துக்கணிப்பிலிருந்து   பெறப்பட்ட விடயங்களே கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.

Photos
Facebook Comments
Rate
0 votes
Likes
Empty
Recommend