Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description

 

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், கூட்டமைப்பை எதிர்த்து, புதியதொரு கட்சியை அல்லது கூட்டணியை ஆரம்பித்துப் போட்டியிடுவதற்கான இந்திய அரசாங்கத்தின் அனுமதியை, ஆசியைப் பெற்றுக் கொள்வதற்கே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியா சென்றிருப்பதாக ஊர்சிதமற்ற ஊகிக்க கூடிய செய்திகள் மட்டுமெ தற்போது முதலமைச்சர் பற்றி கசிந்த வண்ணம் உள்ளன.”

தனக்கு இங்கு நிறைய வேலைகள் இருப்பதாகவும், ஆனாலும் தமது சார்பில், அங்கு செய்ய வேண்டிய வேலைகளைச் செய்வதற்கு, மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் சென்றுள்ளார்கள் என்றும் அந்தச் சந்தேகங்களில் உள்ள நியாயத்தன்மையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.  

கடந்த மார்ச் மாதம், .நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், ஜெனீவாவில் நடந்து கொண்டிருந்தது. அப்போது, கிளிநொச்சியில் ஒரு நிகழ்வில் பங்கேற்கச் சென்றிருந்த முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம், ஊடகவியலாளர் ஒருவர், “ஜெனீவாவுக்கு ஏன் செல்லவில்லைஎன்று கேள்வி எழுப்பியபோது முதலமைச்சர் கூறியிருந்தார்.  

2013ஆம் ஆண்டு விக்னேஸ்வரன், முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர், .நா மனித உரிமைகள் பேரவையின் பல அமர்வுகள் ஜெனீவாவில் நடந்திருக்கின்றன. ஆனால், ஒருபோதும் அவர் ஜெனீவா சென்றதுமில்லை; செல்வதற்கு முயன்றதுமில்லை.  

வேலைப்பளுவை அவர் காரணம் காட்டியிருந்தார். அப்படியானால், ஜெனீவாவுக்குச் செல்பவர்கள் எல்லாம், வேலையில்லாமல் இருப்பவர்களா?   உண்மை அதுவாக இருக்கலாம் என்பதையும் தாண்டி அடுத்தவர்களின் சொந்த விடயங்களில் தலையிடும் ஊடகத்துறையினர் இப்படிப்பல கேள்விகள் கேட்பதும் அதற்கு வாயில் வரும் பொய்களை பதிலாகத்தருவதும் பழக்கதோசம் என்பது இன்னுமொரு சாராரின் விருப்பமாக உள்ளது

தமது வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டுத் தான், பலரும் அங்கு சென்று நியாயம் கேட்க முனைகிறார்கள்.  முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் விக்னேஸ்வரன், கனடாவுக்கும் இலண்டனுக்கும் சென்று வந்திருந்தார். முன்னர் ஓரிரண்டு தடவைகளும், இப்போதும் இந்தியாவுக்குச் சென்று வந்திருக்கிறார்.   

இதன்போதெல்லாம் அவருக்கு வேலைப்பளு இல்லையா? இம்முறை அவர் இரண்டு வாரங்கள் இந்தியா சென்றிருக்கிறார். ஓய்வெடுப்பதும், விடுமுறையில் வெளிநாடு செல்வதும் தவறு அல்ல; தொடர் பணி, சோர்வைத் தரும். அவர் நிம்மதியைத் தேடி, ஆன்மீகப் பயணம் செல்வது ஒன்றும் தவறு இல்லை.  

ஆனால், ஜெனீவாவுக்கான பயணத்துக்கு அவர் கூறிய காரணம் சரியானது அல்ல; நியாயப்படுத்த முடியாதது. முல்லைத்தீவின் தென்பகுதியில், தமிழர்களின் பூர்வீக நிலங்கள், சிங்களக் குடியேற்றங்களால் அபகரிக்கப்படுவதாக வடக்கு மாகாண சபையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.   

இதையடுத்து, கடந்த 10ஆம் திகதி, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும், பெரும்பான்மையின மக்கள் குடியேற்றங்கள் நடக்கின்ற பகுதிகளைப் பார்வையிட்டு, அதற்கு எதிராகப் போராட்டம் ஒன்றை நடத்துவதென ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.  

அதற்கமைய, கடந்த 10ஆம் திகதி, அனைத்து உறுப்பினர்களும் முல்லைத்தீவுக்குச் சென்றனர். ஆனால், முதலமைச்சர் மட்டும் அங்கு செல்லவில்லை. அவர் அடுத்தநாள், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்காக கொழும்புக்குச் சென்றிருந்தார். வடக்கு மாகாண சபையில் தீர்மானம் எடுக்கப்பட்ட போது, முதலமைச்சர் அவையில் இருந்தார். அவருக்கு இந்தப் போராட்டம் பற்றியும் தெரிந்திருந்தது. ஆனால், அதை விட்டுவிட்டு அவர் இந்தியாவுக்குச் சென்றிருந்தார்.  

முல்லைத்தீவு போராட்டத்துக்குச் செல்லாமல், இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் விக்னேஸ்வரன், அங்கு சித்திரை விழா, நினைத்த காரியம் நடந்தேற உதவும் திருத்தலங்களில், வழிபாடுகளில் அதிக கவனம் செலுத்தியதாகத் தகவல்கள் கூறுகின்றன. அவர் புதுடெல்லிக்குச் செல்லக்கூடும் என்றும், அல்லது புதுடெல்லிக்கு நெருக்கமான கொள்கை வகுப்பாளர்களுடன் பேசக் கூடும் என்றும் பரவலான பேச்சுகள் உள்ளன

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், கூட்டமைப்பு அல்லாத ஓர் அணியில் களமிறங்கும் தமது முடிவை, சூசகமாக வெளிப்படுத்தி விட்டு வந்துள்ள அவரை, புதுடெல்லி எவ்வாறு கையாளப் போகிறது என்று பலரும் உன்னிப்பாக அவதானிக்கின்றனர்.  

முதலமைச்சர் விக்னேஸ்வரனை, இந்தியா பெரியளவில் அரவணைத்து வைத்திருந்தது என்று கூற முடியாது. அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க விரும்புவதாகக் கடிதம் எழுதி, பல ஆண்டுகளாகி விட்ட போதிலும், புதுடெல்லியில் இருந்து அவருக்கு இன்னமும் அதற்கான அழைப்பு வரவில்லை.  

ஆனாலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, ஒருமுறை அவரைச் சந்தித்திருந்தார். இரண்டாவது முறை கொழும்பில், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்தும் அவரைச் சந்தித்திருந்தார். ஆனாலும், வடக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில், அவரைப் புதுடெல்லிக்கு அழைத்துப் பேச, இன்னமும்சவுத் புளொக்கொள்கை வகுப்பாளர்கள் தயாராகவில்லை.  

 

முதலமைச்சர் விக்னேஸ்வரன், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவரில்லை. எனவே, இந்தியா அவரை ஆதரிக்காமல் தவிர்ப்பதற்கு காரணங்களும் குறைவு தான்.   

ஆனால், அவரைச் சுற்றியுள்ள தரப்பினர் சிலர், இந்தியாவைப் பிடிக்காதவர்கள் என்பது புதுடெல்லிக்குத் தெரியும்.  

இப்படியான நிலையில், இந்தியாவை வெறுக்கும் தரப்பினருடன் அமைத்துக் கொள்ளும் கூட்டணியின் மூலம், விக்னேஸ்வரன் பலம் பெற்றால், அவரைத் தமது கைக்குள் வைத்துக் கொள்வதில், சிரமங்கள் ஏற்படும் என்றும் கூட, புதுடெல்லி கருதுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இப்படியான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் விக்னேஸ்வரன் அமைக்கப் போகும் கூட்டணியையும் இந்தியா சமநோக்கில் வைத்திருக்க முயலலாம்.  அதில் சீன சார்ப்பு நிலையை எடுக்க வேண்டும் என்ற கருத்தும் கூட சிலரால் கூறப்பட்டன. ஆனால், வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அத்தகையதொரு நிலை கேள்விக்குறி தான்.   

கூட்டமைப்புக்கு மாற்றான ஓர் அரசியல் அணி உருவானாலும், இந்தியச் சார்பு நிலைக்கு வெளியே, மாற்று அரசியல் அணி ஒன்று உருவாகும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.    

 

 

Photos
Facebook Comments
Rate
0 votes
Likes
Empty
Recommend