கோணேஸ்வரப் பெருமான் ஆலயத்தின் வருடாந்த பிரம்மோற்சவம்

தெட்சணகைலாயம் திருக்கோணேஸ்வரம் அருள் மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமான் ஆலயத்தின் வருடாந்த பிரம்மோற்சவம் ‎30-03-2018 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு துவஜாரோகணம் எனப்படும் திருக் கொடியேற்ற நிகழ்வுடன் பிரமோற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தொருநாட்கள் விழா இடம்பெறும்.

 

நிகழ்வில் முக்கியமான இரதோற்சவம் ‎15-04-2018 ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நகராட்சி மன்றத்தின் உபயமாக இரதோற்சவம் காலை 8.00 மணிக்கு இடம்பெற்று, மாலை தேரடி உற்சவம் நடைபெறும்.

‎16-04-2018 திங்கட்கிழமை காலை7.00 மணிக்கு பாபநாச தீர்த்தக் கிணற்றில் தீர்த்தோற்சவம் இடம் பெற்று, ‎17-04-2018 செவ்வாய்க்கிழமை திருப்பூங்காவணமும், ‎18-04-2018 புதன்கிழமை மாலை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கோணேஸ்வரப் பெருமான் பெருமாட்டியுடன் மங்கள வாத்தியம் முழங்க கோணேசர் மலையை சமுத்திரமார்க்கமாக வலம் வருவார்கள் மறுநாள் வியாழக்கிழமை காலை பிராயச்சித்த அபிசேகமும்,  மாலை வைரவர் பூசையும் இடம் பெறும்.

Comments (0)
Info
Event Name:
கோணேஸ்வரப் பெருமான் ஆலயத்தின் வருடாந்த பிரம்மோற்சவம்
Date start:
Date end:
Timezone:
UTC
Members
Empty
Profile Feed
Empty