Account
People Spy Movies Radios Videos Sounds Photos Forums News Files
  •  
 
 
News
18.02.2012 22:21    Comments: 0    Categories: Cinema News      Tags: திரிஷா  
ராணாவுடன் காதல் இல்லை: திரிஷா

தெலுங்கு நடிகர் ராணாவை, காதலிக்கவில்லை என்று நாயகி திரிஷா கூறியுள்ளார்.

தென்னிந்திய திரையுலக நாயகி திரிஷா, தெலுங்கு நடிகர் ராணாவை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாயின.

இதற்கு பதில் அளித்து நாயகி திரிஷா அளித்த பேட்டியத்துள்ளார்.

நான் நடிகையாக இருப்பதால் என்னை பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. ராணாவை நான் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் வதந்தி பரப்பியுள்ளனர்.

ராணாவும் நானும் நண்பர்கள். எங்களுக்குள் வேறு எந்த தொடர்பும் இல்லை.

திருமணத்தை பற்றி நான் சிந்திக்கவில்லை என்று கூற மாட்டேன். முதலில் எனக்கு மாப்பிள்ளையாக வருவதற்கு தகுதியானவரை நான் சந்திக்க வேண்டும்.

இதுவரை அப்படிப்பட்ட நபரை நான் சந்திக்கவில்லை. இப்போது நான் தனிமையில் சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

 
Comments
Order by: 
Per page: 
 
  • There are no comments yet
Actions
Rating
0 votes
Copyright © 2012 tamilpoonga.com